பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சி கோரிக்கை
அதேவேளை, “எதிரணி உறுப்பினர்கள் கோப் குழுவில் இருந்து விலகுவதால் அக்குழுவின் தலைமைப் பதவியை நான் துறக்கப்போவதில்லை. ஜனாதிபதி அல்லது ஆளுங்கட்சி கோரிக்கை விடுத்தால்...
அரச சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை உயர் பெறுமதியால் அதிகரிக்க முடியுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்தை மாத்திரம் ஏன் அதிகரிக்க முடியாது என அந்த சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சரவைக்கு அனுமதி
முழு பொது சேவையிலுள்ள பதின்மூன்றாயிரம் நிர்வாக தர அதிகாரிகளுக்கு பதினைந்தாயிரம் ரூபா விசேட...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின்...
ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (24.03.2024) இடம்பெற்றுள்ளது.
அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் என்ற 5 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
மரண விசாரணை
உயிரிழந்த சிறுவன் கடந்த ஒரு வார காலமாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று(24) அதிகாலை சிறுவன் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டமையினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது...
கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான தவறான நடத்தை சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடனேயே இடம்பெற்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பொலிஸ் திணைக்களத்திடம் கோரப்பட்ட தகவல்கள், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்னவால் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள்
வடக்கு மாகாணத்தில் தவறான நடத்தைகள் தொடர்பில் 131 பொலிஸ் முறைப்பாடுகள்...
முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், தென்மராட்சியை சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்ற முதியவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த சாதனை நிகழ்வானது நேற்று (24) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு - காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளது.
1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும், தலைமுடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே...
பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் நேற்று (24.03.2024) இரவு திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனமுற்ற மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க எந்தவொரு அம்புயுலன்ஸ் வசதியும் களனி பல்கலைக்கழகத்தில் காணப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போராட்டம்
எனவே, இதற்கு, எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் நிர்வாக...
இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மோதல்
04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பாகமுவ, பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர...
கடற்படை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(22) மாலை உருத்திபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு கடற்படை கட்டளை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோரால் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்
இந்த நடவடிக்கையின் போது உருத்திபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில்...
பாடசாலைப் புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
இதன்படி, பாடசாலைப் புத்தகங்களை 3 பாகங்களாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடையை 3இல் இரண்டாக குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும்,...