இஸ்ரேல் நாட்டிற்கு அவரச அவரசமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்றையதினம் (22-03-2024) சென்றுள்ளார். காசாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை முன்வைக்கவுள்ளது. ஹாமஸ் உடன் போர் தொடங்கியதில் இருந்து 6 வது முறையாக இஸ்ரேல் விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாடவுள்ளார். முன்னதாக...
  இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றையதினம் (22-03-2024) காலை 11.22 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென...
  அமெரிக்காவில் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபட்டு இறுதிக்கட்டத்தை நொருங்கிய 62 வயதான நபரொருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, மருத்துவர்கள் குழுவொன்று வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். குறித்த நபருக்கு மாசசூசெட்ஸ் Massachusetts மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. அப்போது,...
  இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் முன்பு அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரித்தானிய தலைநகர் லண்டன் மேற்கு பகுதியில் உள்ள சவுத்ஹாலில் கடந்த ஆண்டு ஓகஸ்டு மாதம் 15-ம் திகதி இந்திய சுதந்திர தின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். இதன்போது, ஆஷிஷ் சர்மா...
  கேனரி தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், கடற்கரை மணல், கல், பாறைத் துண்டுகளை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கேனரி தீவு நிர்வாகம் எச்சரித்துள்ளது. அட்லான்டிக் கடலில் ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற கேனரி தீவு சர்வதேச சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற அழகிய தீவாகும். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அழகிய கடற்கரைகளில் செந்நிற மணல் மற்றும் வெள்ளை நிற கற்களை பயணத்தின் நினைவாக...
  ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு சில பகுதிகளில் 15 மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹமில்டன் முதல் கிங்ஸ்டன் வரையில் பனிப்பொழிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ அறிக்கையொன்றில் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் இளவரசி கேட் தெரிவித்துள்ளார். அதோடு கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இளவரசி முழுமையாக குணமடைவார் ஆனால் நான் நன்றாயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன்...
  கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என அந்தப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் குடியேறும் சில ஆண்டுகளில் அவர்கள் வேறும் நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் அண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில்...
  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் - தலையாழி பகுதியைச் சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் தினேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட தீர்மானித்துள்ளனர். இதன்போதே, இன்றையதினம் (22-03-2024) மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே...
  இழுபறியில் இருந்த 136 உதவி ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கமைவாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் இதற்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை ஆகியன காரணமாக இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில்...