கனடாவில் ஒட்டாவாவில் இரண்டு வயதேயான சிறுவன் விபத்து ஒன்றின் போது தைரியமாக நடந்து கொண்ட விதம் அனைவரினாலும் போற்றிப் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவன் குளியலறையின் பார்த்டப் சிங்கில் (bathtub drain sink) விரல் சிக்கிக் கொண்டுள்ளது. இரண்டு வயதான கிரேசன் என்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார். இரண்டு வயது சிறுவனின் மூன்று விரல்கள் சிங்க் துளையில் சிக்கிக் கொண்டதாக தீயணைப்புப் படையினருக்கு பெற்றோர் அறிவித்துள்ளனர். விரைந்து சென்ற தீயணைப்புப் பிடையினர்...
  கனடாவின் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளவேனிற் காலம் ஆரம்பமாகும் முதல் வாரத்தில் பனிப்புயல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்றிமீற்றர் பனிப்பொழிவு நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவிலும் பனிப்பொழிவு நிலைமைகளை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடும் பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என...
  கனடாவின் ரொறன்ரோவின் பூங்காக்களில் மது அருந்துவது தொடர்பில் நகராட்சி பணியாளர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். பரீட்சார்த்த அடிப்படையில் சில பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பரீட்சார்த்த முடிவுகளின் அடிப்படையில் பூங்காக்களில் நிரந்தரமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நகராட்சி பணியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பூங்காக்களில் மது அருந்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதி, பூங்காக்களுக்கு செல்வோருக்கு திருப்தி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவின் 27 பொதுப் பூங்காக்களில் 19 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மது...
  பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. கொன்சவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். கார்பன் வரி அறவீடு செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதற்கு போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை. யோசனைக்கு ஆதரவாக கொன்சவடிவ் கட்சியினர் வாக்களித்த போதிலும், லிபரல்,...
  கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் நான்கு பேர் க்ரீ வாஸ்வான்பீ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.
  வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பி ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை (22) அதிகாலை தனது வர்த்தக நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரெ.நேசேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
  சங்கானை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கும் எதிரான மல்லாகம் நீதிமன்றில் இன்று (21.03.2024) வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 174,000 ரூபா அபராதம் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை...
  புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கைது நடவடிக்கை இதன்போது மறைத்து வைக்கப்பட்டு 160 சிறு சிறு பொதிகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 16 லீற்றர் சட்டவிரோத கசிப்பு பைக்கற்றுக்களுடன் 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்துப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில்...
  ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (21.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மட்டக்களப்பு - செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீஸ்வரன் மதுசாந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசாரணை மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துள்ளார்கள். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை...
  நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தில் வீடொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவமானது நேற்றுமுன் தினம் (20.03.2024) மதியம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நடவடிக்கை குறித்த வீட்டார் காலை நேரத்தில் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது , வீட்டினுள் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை அவதானித்ததுடன் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததையும் அவதானித்து உள்ளனர். அத்துடன் நகைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்த இடத்தினை பார்த்த போது நகைகள் திருடப்பட்டு உள்ளதை...