முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் சி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிற்கு நேற்றைய தினம் (21.03.2024) வருகை தந்த சி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை அழைப்பு மேலும், தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை இன்றைய தினம் (22.03.2024) விமான நிலையத்தில் அமைந்துள்ள சி.ஐ.டி அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு அழைப்பு கடிதத்தினை குறித்த தரப்பினரிடம் வழங்கியுள்ளனர். அத்தோடு, குடிவரவு குடியகல்வு தொடர்பான குற்றம்...
  கடற்றொழிலாளர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். குடாப்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நால்வர் யாழ். இந்திய துணை தூதரகத்திற்குச் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் உடல் சோர்வடைந்ததையடுத்து குறித்த இடத்துக்கு வைத்தியர் வரவழைக்கப்பட்டு உடல்நிலை...
  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு தொகுதி காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. கிளி நகரம், மலையாளபுரம்,கிருஷ்ணபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள காணிகள் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள் பிரதேச செயலாளர் முகுந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
  எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலைமை மீண்டும் அம்பலமாகியுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் இந்த விடயம் மீண்டும் வெளிச்சமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மக்களை கவர நம்பிக்கையில்லா தீர்மானம் எவ்வித தேவைப்பாடும் அடிப்படையுமின்றி நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வரப்படுவதாகவும், நாட்டு மக்களுக்கு முன்வைப்பதற்கு எவ்வித திட்டங்களும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு மக்களின் கவனத்தை...
  பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம் தொடர்பிலான நேர்முகத் தேர்வு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளது. புள்ளிகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் இடமாற்றம் இதற்கமைய, அதிகாரிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரிகள் பெரும்பாலும்...
  ஜனாதிபதித் தேர்தலில் புதிய சின்னத்தில் பொதுக் கூட்டணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் இணைந்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ஜனாதிபதியின் விருப்பமாகும். தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். கையடக்க தொலைபேசி அமைச்சர் திரான் அலஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் கட்சி மறுசீரமைக்கப்பட்டதன்...
  புதுக்குடியிருப்பு உடையார் கட்டு சுதந்திரபுரம் பகுதியில் தனது மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21.03.2024) இடம்பெற்றுள்ளது. கைது நடவடிக்கை கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இளம் தாய் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக் குழந்தையுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவரின் முதலாவது கணவனுக்கு பிறந்த 7 வயதுடைய பாடசாலை சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது கொடூரமாக...
  இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, பொதிகள் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான குறுஞ்செய்தி வருவதாக தனது எச்சரிக்கை செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பு இந்நிலையில், வாடிக்கையாளர்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தங்கள் விபரங்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார். நாங்கள் கோழைகள் அல்ல தொடர்ந்தும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி...
  மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 33 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தியகெலியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குடும்பத் தகராறு கொலை சம்பவம் தொடரல்பில் 40 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு நீண்டத் தூரம் சென்ற நிலையில்...