மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று (22.03.2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
வீதிப் போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்த நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட அரச பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி எதிரில் வந்த டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது அரச பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும்...
கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்த 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் குசல யுகத் சஞ்சீவ என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மாணவன் சில காலமாக தந்தையின் அன்பை இழந்துள்ள நிலையில் அவரது தாய் வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் மாணவன் பாட்டியின் பராமரிப்பில் கல்வியை மேற்கொண்டு வந்த நிலையில் விபத்தில்...
கனடாவில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகவும் ஒழுக்கநெறியுடன் செயற்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக் குடும்பம் ஒன்று கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆறு இலங்கையர்கள் படுகொலை
இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கூரிய ஆயுதங்களின் மூலம் 19 வயதான இலங்கை இளைஞரின் தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த...
தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையை கையில் எடுப்பார்கள் எனவும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியினர் வைத்த நம்பிக்கை
"சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிரேஷ்ட அரசியல்வாதி...
மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இது குறித்த வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
பிரேரணை மீதான விவாதம்
இந்த பிரேரணை தொடர்பில் கடந்த 19ம், 20ம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. இன்றைய தினமும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்...
வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும்.
வெங்காய இறக்குமதி
அதன்பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும். இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு அறவிடப்படும் 70 ரூபாய் வரி 10 ரூபாயாக...
வீடொன்றை சோதனையிட்ட போது இடம்பெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீட்டில் நேற்று இரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
பாதாள உலக கும்பல்
இதன்போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸ் அதிரடி படையின் பதில் தாக்குதலில் குறித்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த...
14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அஸ்வெசும பயனாளிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு...
வேலைக்குச் செல்லவிருந்த 100 இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்பதிவு செய்த ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாக இரத்து செய்யப்பட்டதால் அவர்களது வேலைக் கனவுகள் கலைந்து அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் இந்த 100 பணியாளர்களும் நேற்று முன்தினம் இரவு கொரியாவுக்குச் செல்லவிருந்தனர்.
குழப்பமான சூழ்நிலை
விமானம் திடீரென தாமதமானதால் விமான நிலையத்தில் கடும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு இறுதியாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் திரும்பிச்...
தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரின் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள்,அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் அந்த தங்கக் கடைகளில் பணிபுரியும் இரண்டு...