தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரியவருகிறது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின் சந்தேகம் பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
  கோழி இறைச்சியின் சில்லறை விலையானது ரூபா 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூபா 1180 என தெரிவித்துள்ளார். கோழி இறைச்சி மேலும் கறி கோழி ரூபா 1100 ஆக விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ஒரு கிலோ கிராம்...
  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு சென்ற நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தக பிரிவுகள் முற்றாக செயழிந்துள்ளன. இந்த போராட்டம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்டு...
  கண்டியில் இருந்து ஹொரவபொத்தானை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தம்புள்ளை நாவுல உடதெனிய பிரதேசத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் நாலந்தா அரச வைத்தியசாலை, தம்புள்ளை அரச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பாதிப்பு விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து...
  கோட்டை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் பயணிக்கும் தொடருந்து சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில் பயணித்த அதிவேக தொடருந்து கோட்டை மற்றும் கொம்பனித்தெரு தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தொடருந்து தண்டவாளத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தொடருந்து திணைக்கள பிரதிப் பொது...
  கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று (20) அதிகாலை தனது 71 வது வயதில் காலமானார் குறிப்பாக ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர் கடந்த வருடம் தந்தையின் மறைவின் பின் ஆதீனகர்த்தாவாக இருந்து ஆலயத்தை வழிநடாத்தி வந்தார். இறுதிக்கிரியைகள் அண்மைக் காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை காலை 6 மணியளவில் ஆரம்பமாகி...
  பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார். போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்துவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களில், மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில்...
  டெல்லி கேப்பிட்டல்ஸ் ரிஷாப் பண்ட் தான் அணியின் தலைவராக செயல்படுவார் என்று புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷாப் பண்ட், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகின. இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஐபிஎல் தொடரில் பண்ட்டின் ஆட்டத்தை காண கிரிக்கெட் பலரும் எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் ரிஷாப் பண்ட்டின் புகைப்படத்தை கேப்டன் என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளது. அத்துடன் மன...
  டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஓயவை அறிவித்துள்ளார். வனிந்து ஹசரங்கா ஓய்வு 26 வயதான இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா(Vanindu Hasaranga), டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இலங்கை அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அதே நேரத்தில்,...
  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் கிடைத்தால் தனக்கு கொடுக்குமாறு இந்திய வீரர் அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார். IPL 2024 ஐபிஎல் 2024ன் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22ம் திகதி முதல் தொடங்குகிறது. இதனால் உலகெங்கும் உள்ள வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இதன் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இருதரப்பு அணி ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் ரசிகர்களும் டிக்கெட்டை...