ஒட்டவாவில் மற்றுமொரு கொடூர சம்பவம்; மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால்
Thinappuyal News -0
கனடா ஒட்டாவாவில் வசிக்கும் இந்தியர் மனைவியை கொலை செய்துவிட்டு இந்தியாவில் வசிக்கும் தாயிடம் வீடியோ காலில் கணவர் தகவல் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய ஜக்பிரீத் சிங், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
உயிருக்கு போராடிய மனைவி
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங்-பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
200 மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அவற்றில் 15 மதுபானசாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (19.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான உற்பத்தி உரிமங்கள்
“தேர்தலை இலக்காகக் கொண்டு ஏற்கனவே ஆறு மதுபான உற்பத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் கீழ் இந்த...
புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையை பெண்ணின்...
வெடுக்குநாறி மலை தமிழர்களின் சொத்து எனவும், அதை நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும் எனவும் வெடுக்கு நாறி மலையில் கைது செய்யப்பட்டு விடுதலையான எஸ்.தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது ஆலய பூகசர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இன்று (19.03.2024) அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு...
இரணைமடு குளத்தின் கீழான 2022 ம் ஆண்டு மற்றும் 2023 ஆண்டு சிறுபோகத்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட விஸ்தீரன அளவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும், அந்த அறிக்கைகளை நளினப் படுத்தும் வகையிலும் எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் இடம் பெறுவதற்கும் வழி வகுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறு போக பயிர்செய்கையின் போது பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
ஐந்து...
திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
இதனால் நிர்வாக சபை தொடர்ந்து தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணேஸ்வரர் ஆலயத்தின் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரைக்கான நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் திருகோணமலையில் நேற்று (19.03.2024) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மீளாய்வு...
மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற நிதிக்குழு விடுத்த கோரிக்கை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அனைத்து ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்து அறிக்கை தருமாறு நாடாளுமன்ற நிதிக்குழு மத்திய வங்கியின் நிர்வாக சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநர் மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும்...
கோரக்கன் கட்டு பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயதிற்கும் குறைந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது நேற்று (19.03.2024) மதியம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.எம் சகாப்தீனின் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு
இதன்போது குறித்த சந்தேக நபருக்கு 12 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"எமது கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இந்த வாரத்துக்குள் கூடி இது பற்றி ஆராய்வார்கள்.
இந்தக் கூட்டத்தின் பிரகாரம்...
வெப்பநிலை உயர்வினால் தெரு நாய்கள், வீட்டு செல்லப்பிராணிகள் மட்டுமின்றி வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு அதிக வெப்பம் காரணமாக வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவது நல்லது என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படும் அபாயம்
மேலும், அதிக வெப்பம் நிலவும் போது 20 நிமிடங்களுக்கு அதிகமாக பகல்...