விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரின் யோசனை அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபா நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த தீர்மானம் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு...
  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி 2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
  நுகேகலய கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு விஷமாகியதன் காரணமாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 மாணவர்களும் 03 மாணவிகளும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறித்த மீன் இரவில் சாப்பிட்ட பொறித்த மீன் வகையே இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சூரியவெவ வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர்...
  ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய ரோஹிதவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊழல்,மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு இந்த முறைப்பாடு சட்டவிரோத நிதிச் சொத்துக்கள் பிரிவிடம் அதிகாரகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு பிரதேச சபை உறுப்பினராக தெரிவான ரோஹித இதுவரையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் எனவும் இந்தக் காலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட...
  5 பாதாள உலக குழு தலைவர்களுக்கு விமான கடவுச்சீட்டு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் இரண்டு பிரதி கட்டுப்பாட்டாளர்கள் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை தயாரித்துள்ளனர். பாதாள உலக குழு தலைவர்களான மத்துகம ஷான் மற்றும் ஹீனட்டியன மகேஷ் ஆகியோருக்கு கடவுச்சீட்டு தயாரித்த சம்பவத்துடன் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச்சீட்டுக்கள் இந்த ஐந்து பாதாள உலக தலைவர்களில் கொஸ்கொட சுஜீ,...
  நேற்றைய தினம் லெவ் ஷெய்னின் அவர்களின் “புலனாய்வாளரின் குறிப்புகள்” என்னும் நூல் படித்தேன். இது ரஸ்ய புலனாய்வாளர் ஒருவரின் குறிப்புகள். அவர் குறிப்பிடுகின்றார் “ புலனாய்வாளன் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தின் ஆழத்திலும் புகுந்து பார்க்க வேண்டும். ஆகவேதான் ஒரு புலனாய்வாளனுக்கும் ஓர் எழுத்தாளனுக்கும் இடையே பொதுவானவை அதிகம் இருக்கின்றன.” எம் இனத்திலும் ஒரு பெருமைப்படக்கூடிய புலனாய்வாளர் இருந்தார். அவருடைய குறிப்புகள் ஒரு நூலாக வர வேண்டும். அவர் வன்னிக் காட்டுக்குள் இருந்துகொண்டு எப்படி...
  வெடுக்குநாரி விவகாரத்தில் யாழ்பாண மேட்டுக்குடி சாதியவாத அரசியல் அடியார் விபுலானந்ததா குற்ற்சாட்டு வெடுக்குநாரி விவகாரத்தில் யாழ்பாண மேட்;டுக்குடி சாதியவாத அரசியல் அடியார் விபுலானந்ததா குற்ற்சாட்டு
  உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.3.2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் போதனா வைத்தியசாலை உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்துக்கொண்டிருந்தவர் மீது பட்டா ரக வாகனமொன்று மோதியதினாலேயே விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி, இன்றையதினம் (18.03.2024) காலை உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் வீட்டின் கிணற்று மோட்டார் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அதனையடுத்து, மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது யுவதி கிணற்றில் விழுந்துள்ளதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து,...
  மரக்கறிகளின் விலை 500 முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது பெரும்பாலான மரக்கறிகளின் விலை 200 ரூபாவிற்கும் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், சிங்கள புத்தாண்டு காலத்திலும் விலை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது முள்ளங்கியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இரசாயன...