ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ரேகை அமைப்புக்கள் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உள்ளங் கைகளில் உள்ளது போன்று தமது கையிலும் ரேகை அமைப்புக்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நாட்டை பாதுகாக்கக் கூடிய மிகவும் பொருத்தமான தலைவர் தாமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போதும்...
  ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்த ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை அரசாங்கம் வழங்கிய போதிலும் அதன் முழுமையான அறிக்கை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கை குறித்த ஆறு இறுவட்டுக்கள் தமக்கு கிடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார். பிரதான சூத்திரதாரி 70000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் சுமார் 1500 பக்கங்கள் எமக்குக் கிடைக்கவில்லை என...
  வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடலுக்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று (17.03.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன்போது மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேடுதல் நடவடிக்கை உயிரிழந்த நபர் கடற்றொழிலுக்காக கடந்த சனிக்கிழமை (16) அன்று தெப்பம் மூலம் கடலுக்கு சென்ற போதே காணாமல் போனதாக தெரிவிக்ப்படுகின்றது. இந்நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்...
  உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் நேற்று சரணடைந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்...
  தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். அதன் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர், செப்டம்பர்...
  வெப்பநிலை இன்று (18) அவதானம் செலுத்த வேண்டிய அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அவதானம் செலுத்த வேண்டிய அளவிற்கு வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்கள் எனவே, போதியளவு நீரை அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள்...
  வீடமைப்புத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஒரு வீடு, ரூபா 28 இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளைக் கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலைத்திட்டப் பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் நன்கொடை உதவியுடனான இந்தத் திட்டம் தொடர்பில் இந்திய அரசுக்கு நன்றி கூறி, வீடு கட்டும் பணிகளை நாம்...
  அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், தோல் எரியும் தன்மையை காணப்படலாம் என்றும் கூறியுள்ளார். சிறு பிள்ளைகள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது எனவும்...
  பாடக் கொப்பிகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி(வற் வரி) அடுத்த மாதம் முதல் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறையும் விலை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலை பதினெட்டு வீதத்தால் குறைக்கப்படும்.  
  கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்க விக்கிரமசிங்க இன்று (15) வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளார். ஒரே இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் உட்பட 06 பேர் கொலை செய்யப்பட்ட ஒட்டாவா படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதுடைய இலங்கையர் நேற்று தொலைபேசியின் வாயிலாக ஒட்டாவா நீதிமன்றில் ஆஜரானார். இரண்டாவது நாள் விசாரணை 4 நிமிடங்களுக்கு...