'வெண் ஈ நோய்' தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள 'வெண் ஈ நோய்' தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் பயிர் பாதுகாப்பு சேவை நிலைய அதிகாரிகள் நேற்று (15) மன்னாருக்கு வருகை தந்து மன்னாரிலும் குறித்த நோய் தாக்கம் தொடர்பாக தெளிவு படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்டச் செயலகத்தின் வளாகத்திலும்...
  கைதிகளின் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மொத்தமாக அனைத்து சிறைச்சாலைகளிலும் 30800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி டி திஸாநாயக்க இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார். கைதிகள் இடமாற்றம் கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய சிறைச்சாலைகளுடன் ஒப்பீடு செய்யும் போது கைதிகளின் எண்ணிக்கை 300 வீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை, ஹொரண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக நிர்மானிக்கப்படும் சிறைச்சாலையில்...
  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுளள்ளது. இந்த சந்திப்பில் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க கலந்துகொண்டிருந்தார். குறித்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார். தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள் அமைப்பு களனியில் ஏற்பாடு செய்திருந்த மஹா சங்க சம்மேளனத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''நாட்டின் அனைத்து விடயங்களையும் அரசியல்மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும். பெறுமதிமிக்க வளங்கள் காலத்துக்கு தேவையான மழை பெய்து...
  விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வயோதிப பழைய மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த போட்டியானது நேற்றையதினம்(15.03.2024) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. மெய்வல்லுனர் போட்டி இதன்போது 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்றியுள்ளனர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய...
  2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் வெற்றிடமாக உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்நாட்களில் நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15.3.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார். கிராம சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு மேலும் கருத்துத் தெரிவித்த...
  நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று(15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெட்ரோல் குண்டு வீசி தீயிட்டு எரித்ததுடன் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர். பொலிஸ் விசாரணை வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் தமது வீட்டை உடைத்து மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு...
  இலங்கை கடற்படை கடந்த காலங்களில் ஈபிடிபி போன்ற அரச ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட கடத்தல்கள், படுகொலைகளுக்கும் ஆதரவாக செயற்பட்டிருக்ககூடும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி யாழ் மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன் கேள்வியெழுப்பியுள்ளார். “யாழ் பொன்னாலையில் ஆயுதம் தரித்த கடற்படையினரின் முன்பாகவே வன்முறைக் கும்பலொன்றினால் தமிழ் இளைஞனொருவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமையானது தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் மீதான சந்தேகத்தினை மென்மேலும் வலுவடையச்செய்துள்ளது . இலங்கை கடற்படையின் கடமை...
  26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட 26 வயதுடைய பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் அனுராதபுரம், பமுகொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் சீதுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில்...
  விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ள அதேவேளை, அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது, இன்று (16.03.2024) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு தமிழ் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாகனப் பேரணி இந்நிலையிலேயே, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில்...