ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்றிரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதேவேளை, இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும், இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பதில் இருந்து 58...
  கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குடியிருப்பு ஒன்றில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை தாக்கியதாக பொலிஸாருக்கு நபர் ஒருவர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நபரை பொலிஸர்ர் கைது செய்துள்ளனர். குறித்த பெண் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கொலை செய்ததாக கூறியவரும் கொலையுண்ட பெண்ணும் ஒருவரை...
  பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை. இதையடுத்து அவரது உடல்நிலை தொடர்பில் வதந்தி பரவியது. இதனால் கடந்த 10 ம் திகதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. எனினும், குறித்த புகைப்படம் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில்...
  ஹெய்ட்டியில் கடமையில் ஈடுபட்டுள்ள தமது தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார். தூதரகத்தில் இன்றியமையா பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட உள்ளனர். எனினும், ஹெய்ட்டி வாழ் கனடியர்களுக்கு தொடர்ந்தும் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் ஹெய்ட்டி மக்களுக்கு கனடா உதவிகளை வழங்கும் என அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.எனினும் முதலில்...
  கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு லட்சம் டொலர்களை பரிசாக வென்றுள்ளார். கெரி டோலா என்பவர் லொட்டோ மெக்ஸ் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றுள்ளார். பரிசு வெற்றி குறித்த சந்தேகம் காரணமாக தாம் 13 தடவைகள் லொத்தர் சீட்டை ஸ்கேன் செய்து உறுதி...
  கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞனின் விளக்க மறியல் காலம் நீடிக்க்பபட்டுள்ளது. 19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற இளைஞர் பாதுகாப்பு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி எவான் லைடெல் தெரிவித்துள்ளார். கத்தி போன்ற கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி நான்கு சிறுவர்கள் ஒரு பெண் ஒரு ஆண் உள்ளிட்ட ஆறு பேரை சொய்சா படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சொய்சா நேற்றைய...
  விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தவர், விமான நிலையத்தில் திடீர் சுகயீனமடைந்துள்ளார். CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து புறப்பட வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணி உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன், மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில்...
  மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானமானது இன்று (14.03.2024) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பிரேரணை மீதான வாக்கெடுப்பு மேலும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் 20ஆம் திகதி மாலை நடத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  கற்சிலைமடுவில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சோதனைக்காக மாங்குளம் வீதி ஊடாக ஒட்டிசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் தடுக்கப்பட்டுள்ளது. விசேட சோதனை நடவடிக்கை எனினும் குறித்த டிப்பர் வாகனம் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்காது தொடர்ந்து பயணித்தமையினால் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் துரத்திப் பிடிக்கப்பட்டு கற்சிலைமடுவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது டிப்பர் வாகனத்தின்...