புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளிலிருந்து முப்படையினரை முற்றாக அகற்றி, அவர்களுக்கு பதிலாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனை அவர் மேலும் குறிப்பிடுகையில்,''மட்டக்களப்பு, மாந்தீவில் புனர்வாழ்வளிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சுகாதார அமைச்சுடன் நீதி அமைச்சும் இணைந்து முன்னெடுத்த கலந்துரையாடலில் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, தற்போது தொற்று நோய்...
  வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது கடற்படையினர் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கடற்படையினர் கடந்த மார்ச் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படை முகாமிற்கு அருகில்...
  புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ எனும் விசேட நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சோதனை நடவடிக்கை அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று (13.03.2024) மாலை விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எந்தவித சந்தேகத்திற்கிடமான...
  சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா சட்டத்தரணிகள் சிலர் அவர்களை பார்வையிட்ட நிலையில், இன்றும் (14.03.2024) போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம்...
  16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2011ஆம் ஆண்டு நானுஓயா பகுதியைச் சேர்ந்த நபரால் மேற்படி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 வருட கடூழிய சிறைத்தண்டனை இதேவேளை, 52 வயதுடைய சந்தேகநபருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து,...
  இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் துறைமுகங்கள், கடல்சார் விவகாரங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நியமனம் நேற்று (13) வழங்கப்பட்டுள்ளது. எயார் வைஸ் மார்ஷல் கொட்டகதெனிய, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச கற்கைகள் மற்றும் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு...
  அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இலங்கை அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் பொதிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பி கடனட்டை தரவு திருட்டு மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், SL POST, Sri Lanka...
  உங்களது ஐபோன் (iPhone) தண்ணீரில் விழுந்துவிட்டால் நீங்கள் அதனை எப்படி காய வைக்க வேண்டும் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம். சில சமயங்களில் உங்களது ஐபோன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் விழுந்துவிடும் அல்லது மழையில் நனைந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த மாதிரி நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான். Disconnect செய்யுங்கள் உங்களது iPhone தண்ணீரில் விழுந்தவுடன் சார்ஜரில் அல்லது வேறு ஏதேனும் சாதனத்துடன் தொடர்பில் இருந்தால் உடனே Disconnect செய்யுங்கள். ஏனென்றால்,...
  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையை குவாண்டம் எனெர்ஜி (Quantum Energy) நிறுவனம் அறிவித்துள்ளது. விலை குறைப்பு Quantum Energy நிறுவனத்தின் Plasma வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் Plasma X மற்றும் Plasma XR ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலை 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இவை இரண்டும் Ex-showroom விலைகள் ஆகும். இந்த விலை குறைப்பானது மார்ச் 31 -ம் திகதி...
  சிறப்பான வடிவமைப்புடன் நத்திங் போன் (2a) சரியான விலையில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Nothing Phone (2a) மார்ச் 2024 மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் போன் (2a) நடுத்தர ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய கால் தடத்தை பதித்துள்ளது. முன்னோடி மாடலான போன் (1) வெற்றியைத் தொடர்ந்து, போன் (2a) போட்டித்திறன் மிக்க விலையில் பல அம்சங்கள் நிறைந்த அனுபவத்தை வழங்குகிறது. கவர்ச்சிகரமான திரை மற்றும் வடிவமைப்பு போன் (2a) பெரிய 6.7-இன்ச் திரையைக் கொண்டுள்ளது, மென்மையான...