ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். இருப்பினும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம். என்றார்.
இதன்போது, புடினிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பில் சிந்தித்தது உண்டா...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற மூன்று இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கைது
Thinappuyal News -
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்கள் நான்குபேர்.
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், அதையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய புதுப் புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தவண்ணம் உள்ளார்கள் சட்ட விரோத புலம்பெயர்வோர்.
அவ்வகையில், இரு நாடுகளுக்குமிடையில் பயணிக்கும் சரக்கு ரயில் ஒன்றிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் குதித்துள்ளார்கள் நான்கு பேர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள Buffalo என்னும் நகரம், கனடா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது....
கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர், நாற்பது ஆண்டுகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 12 வயதான சிறுவன் ஒருவனை இந்த இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
64 வயதான எட்வர்ட் பாலோசியஸ் மற்றும் 59 வயதான சீன் ஹான்கொக் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனை இருவரும் பல சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இருவரும் தன்னார்வ...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோய்ப் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதிலும் பதிவான தட்டம்மை நோயாளர்களை விடவும் இந்த ஆண்டில் இதுவரையில் ஒன்றாரியோவில் கூடுதல் எண்ணிக்கை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இந்தியா சென்று திரும்பிய குழந்தையொன்று தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹமில்டன் பொதுச் சுகாதார திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் இதுவரையில் ஒன்றாரியோ மாகாணத்தில்...
தனது பூனைக் குட்டியை கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு பத்தாயிரம் டொலர் சன்மானம் வழங்குவதாக கனடிய பெண் ஒருவர் அறிவித்துள்ளார்.
ரொறன்ரோவின் காஸா லோமா பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பூனை காணாமல் போயுள்ளது.
மிக்கா என்ற ஒன்பது மாதங்கள் வயதான பூனையொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இரவு பகலாக இந்தப் பூனையை தேடி வருவதாக குறித்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தனது செல்லப் பிராணியை கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் டொலர் சன்மானம்...
கனடாவில் தனது மனைவியை 35 தடவைகள் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பிரமட்டனைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு பொதுப் பூங்கா ஒன்றில் வைத்து குறித்த நபர் தனது மனைவியை 35 தடவைகள் கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
66 வயதான ஜர்னாயில் ரன்டாவா என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 64 வயதான டால்பிர் என்ற...
புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (13.03.2024)மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்து...
வெடுக்குநாறிமலை ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சிறைச்சாலையின் ஊடக பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் போலியானவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பரவும் போலியான செய்தி தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொய்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 08 நபர்களில் ஐவர் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்கு நேற்று(13.03.2024) சென்று கைதான நபர்களை பார்வையிட்டிருந்தேன். அவர்கள் நீதிகோரி உண்ணாவிரத போராட்டத்தில்...
விசுவமடு பிரதேசத்தில் உள்ள வள்ளுவர்புரம்,மாணிக்கபுரம்,றெட்பானா,இளங்கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார சபையினரின் நடடிக்கை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் நவீன தொலைபேசி பாவனை தெரியாத வயோதிப குடும்பங்களே அதிகளவில் வாழ்ந்து வருகின்ற நிலையில் வீடுகளுக்கு செல்லும் மின்சார சபையின் ஊழியர்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மின் இணைப்பினை துண்டித்து விடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பு
இது தொடர்பில் விசாரித்த போது மின்சார கட்டணம் அவர்களின்...
"தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது." என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. கூறியுள்ளாரே என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர்...