ஜப்பான் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; இரசாயன தொட்டியில் வீழ்ந்த பூனை
Thinappuyal News -0
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபுகுயாமா நகரத்தில், அதிக நச்சுத்தன்மையுள்ள இரசாயனங்கள் அடங்கிய தொட்டியில் பூனை விழுந்ததால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பூனை அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஹெக்ஸாவலன்ட் குரோமியம் (hexavalent chromium) என்ற இராசாயனப்பொருள் அடங்கிய தொட்டிக்குள் பூனை விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
புற்றுநோய் உள்ளிட்ட ரசாயனங்களின் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகுயாமா நகர மக்கள் பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளிடம்...
கனடாவில் மோசடியில் சிக்கிய வங்கி வடிக்கையாளர் ஒருவர் ஏனையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் நபர் ஒருவர் தம்மை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மொன்றியால் வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய ஸ்காப்ரோவைச் சேர்ந்த ஏஞ்சலா பெங் என்ற பெண்ணே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் விசாரணை நடத்தி பணம் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மிடமிருந்து சுமார் 17000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாக குறித்த பெண் குற்றம்...
கனடாவின் ரொறன்ரோவில் உறவினர்கள் மூன்று பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவா காயமடைந்துள்ளார்.
ரொறன்ரோவின் ரீஜன்ட் பார்க்கின் டுன்டாஸ் வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
நபர் ஒருவர் தனது மூன்று உறவினர்கள் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில்...
ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தல்
"ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார். தோல்வி எனத் தெரிந்தால் அதில் போட்டியிடாமல் இருக்கும் முடிவை 2005 ஆம் ஆண்டிலேயே அவர் எடுத்துவிட்டார்.
தற்போது ஆய்வு நடத்துகின்றார். அதில் தோல்வி எனத் தெரிந்தால் போட்டியிடமாட்டார். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்...
வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜே - 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், ஜே - 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு...
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று (12.03.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள் வெட்டு தாக்குதல்
சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (12.03.2024) மாலையில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதன்போது உயிரிழந்தவரும் அவரது நண்பனான 52 வயதுடைய ஆகிய இருவரும் இரவு உணவுக்காக கொக்கு இறைச்சியை கொண்டுவருவதற்காக சம்பவதினமான நேற்று (12) மாலை...
பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (12.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை ரிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம்...
மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (12.03.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
இதன்போது மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (12) இரவு 09.00 மணியளவில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கடற்கரையில் வீசப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இருப்பினும், உயிரிழந்த பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.