கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று(13.03.2024),நாளை(14.03.2024) மற்றும் நாளை மறுதினம்(15.03.2024) ஆகிய தினங்களில், நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. நேர்முகப்பரீட்சை அத்துடன், நேர்முகப்பரீட்சைக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய தகைமைகளைப் பெற்று இதுவரை அழைப்புக் கடிதங்களை பெறாத விண்ணப்பதாரர்கள்...
  நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை என்பன இந்தக் கோரிக்கையை மக்களிடம் விடுத்துள்ளன. மேலும் இரண்டு மாதங்களுக்கு இந்த வறட்சி நிலைமை நீடித்தால் சுழற்சி முறையில் நீர் விநியோகம்...
  மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி தரையில் விழுந்து உருகுவதற்கு பல மணி நேரம் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பாரிய பனிக்கட்டி பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானில் இருந்து...
  பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் மற்றைய நபரும் நேற்று (12) அறை விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாலை 5.00 மணி ஆகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால், ஹோட்டல் உரிமையாளர் அருகம்பே...
  பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உத்தரவின் பேரில் இரு வாடகை கொலையாளிகளால் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தாக்குதல்களும் T-56 ஆயுதத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டதுடன், இரண்டு தாக்குதல்களிலும் ஒரே கொலையாளிகள் ஈடுபட்டுள்ளதாக சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த தாக்குதலின் பின்னர்,...
  கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞனே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. கனடா செல்வதில் விருப்பம் இல்லை ஆனால் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு...
  பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், வெளிப்புற செயற்பாடு வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...
  8 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளன. வவுனியா பண்டாரிக்குளம், வைரவர் புளியங்குளம், மற்றும் நகர மத்தி ஆகிய பகுதிகளில் இருந்தே நேற்று (11.03.2024) இரவு குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டப்பணம் அத்துடன், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடியதால் இந்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை நகரசபைக்கு செலுத்தி அவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளமுடியும்...
  வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் தொல்பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த...
  பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால்மா இறக்குமதி குறித்து இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 - 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தெரவித்துள்ளார். விலைக்குறைப்பு அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வருமென அவர் தெரிவித்துள்ளார். தற்போது பால்மாவின் விலை ஒரு கிலோ...