அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த 62 வயதுடைய முத்துத்தம்பி கிருஸ்ணசாமி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதல்
குறித்த நபர் முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த போதே யானை தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி S.H.மஹ்ரூஸ் சடலத்தை முல்லைத்தீவு...
முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(11.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற பொலிஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி பயணிக்கும் பொழுது தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி புரண்டுள்ளது.
இதன்போது வாகன சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பாக...
மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (11.03.2024) இடம்பெற்றுள்ளது.
வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் குண்டுகள்
இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து...
படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், , இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் அதுசார்ந்த திணைக்களங்கள் மற்றும் மக்களுக்கு கையளிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
அரச திணைக்களங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் 40.9 ஏக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள் உறுதிப்படுத்தி பிரதேச...
சதொச மனித புதைகுழி வழக்கில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை நேற்று (11) மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவிக்கையில், மன்னார் சதொச மனித...
உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி 14 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலே நேற்று(11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் இரு சிறுவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருந்த நிலையில் உயர்...
கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட கைது செய்யப்பட்ட கணவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது கொலை என சந்தேகிக்கப்படுவதாகவும் சட்ட வைத்திய மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கணவன் - மனைவி மோதல்
சந்தேகநபரின் கணவர் மனைவியுடன்...
நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்று (11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், T-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் எல்பிட்டிய வைத்தியசாலையிலும்...
தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இருப்பினும், அநுர திஸாநாயக்கவுக்கு உதவி செய்து...
யுக்திய நடவடிக்கைக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட நடவடிக்கை
071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக பொது மக்கள் விசேட நடவடிக்கை பிரிவுக்கு தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்தின்...