வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாள்வெட்டு தாக்குதல்
உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் முன்னர்...
மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் நேற்று (11) பிற்பகல் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
வெளியான காரணம்
குறித்த...
பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது,
சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி பல்வேறு ஒளிப்பட, வணிக மற்றும் விற்பனை நிலையங்களினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இலட்சினையானது வியாபார நோக்கில் உரிய அனுமதிகள் எவையுமின்றி பொது வெளிகளில்...
நேற்று பிற்பகல் பலாங்கொடை - மிரிஸ்ஸாவத்தை வீதியில் சாரதியின்றி பயணித்த லொறி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் வீட்டின் மீது குறித்த லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறி விபத்து
விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி திடீரென இயங்கிய நிலையில் கீழ் நோக்கி பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லேரியா, உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அழகு நிலையம் ஒன்றின் முகாமையாளரான ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி என்ற 27 வயதுடைய பெண்ணும், தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க...
ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது.
இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை நபரொருவர் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
குறித்த இலங்கையர்களை படுகொலை செய்த 19 வயதான மாணவர் பெப்ரியோ டி சொய்சா இளைஞன் படிப்பதற்காக இவர்கள் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷனியின் கணவரான தனுஷ்க விக்ரமசிங்கவின் நண்பருடைய மகன்...
அதிகளவு சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
Thinappuyal News -
சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் (09) காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தில் கிருமி தொற்று என திருகோணமலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதி இலக்கம் 12 இல் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித்குமார் கௌசல்யா எனும் 37 வயதான குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து சிறுநீர்...
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துாவ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொலிஸ் அதிகாரிகளின் குறைபாடுகள் இருந்தால், அந்த சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றால், குறிப்பாக...
யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நுகேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (11) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய, வெலேவத்தை மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் அங்கு சென்றிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு பெண்ணிடம் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்தினார்.
பொலிஸ் மா அதிபர் - "இதற்கு முன் எத்தனை முறை...
பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனமல்வில - ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்கு மீது துப்பாக்கிச் சூடு
ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.
உயிரிழந்த பிக்கு 43 வயதுடைய கலபாலுவாவே...