விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டுள்ளோம். அதுபோன்று லண்டனில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில் அச்சு அசலாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரண்டு பேர் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்ட சுவாரஸ்யம் நடந்துள்ளது. இருவரின் பெயரும் மார்க் கார்லாண்ட் என தெரியவந்தபோது மேலும் சுவாரஸ்யம் கூடிப்போனது. இருவரும்...
  இஸ்ரேல்- காசாவை தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் தற்போது யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லெபனான் மீதான தாக்குதலின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்று 4 வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியாகும். இந்த இடம் தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல்...
  பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு கடுமையான புயல் வீசியதில் பலர் காணாமல் போயுள்ளனர். கார்ட் பகுதியில் சனிக்கிழமை இரவு பாலங்களை காரில் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரைக் காணவில்லை. ஒரு தந்தையும் 4 மற்றும் 13 வயதுடைய அவரது இரண்டு குழந்தைகளும் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் Nîmes க்கு வடக்கே உள்ள Dions இல் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
  பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக பகல்நேர சேமிப்பு நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது. மாகாணத்தின் சில நகரங்களில் மட்டும் இந்த நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. வொஷிங்டன், ஓர்ஜென் மற்றும் கலிபோர்னியா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் நிரந்தர நேர மாற்றக் கொள்கை அமுல்படுத்தப்படும் பிரிட்டிஸ் கொலம்பிய அரசாங்கம் காத்திருக்கின்றது. கனடாவின் அநேகமான பகுதிகளில் இன்று அதிகாலை 2.00...
  இந்தோனேசியாவில் சுமத்திராத தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், வீதிகளில் மழைநீர் நிரம்பியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, 8,000க்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் மாகாணத்தின் பல பகுதிகளில் 45 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும்...
  சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான அரிய கண்டு பிடிப்பு ஒன்றை கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். விபத்துக்கள் மூலமாக ஆண்டு தோறும் சுமார் ஒரு மில்லியன் சிறுவர் சிறுமியர் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களை வரையறுக்கும் நோக்கில் கனடிய மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். மெய்நிகர் தொழில்நுட்பம் மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை மொன்றியல் மருத்துவர்கள்...
  வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார். 60 இலட்சம் ரூபா...
  ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர்; கோவில் மகா சிவராத்திரி தின பொலிஸ் அராஜகங்களை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் தலையாய விரதமே மகா சிவராத்திரி,...
  வாடகைக்கு வாகனங்களை வழங்குவதாக கூறி இணையத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கையடக்க தொலைபேசி மென்பொருள் மூலமாகவும், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒன்லைனில் விற்பனை செய்து வாடகைக்கு விடும் இணையதளம் மூலமாகவும் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்களுக்கு முன் பணம் வாங்கிக் கொண்டு, வாகனங்கள் வாங்குபவரை தவிர்த்துவிட்டு, தொலைபேசி எண்களை மாற்றி விடுவதாக மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மோசடியாளர்கள் மஹரகமவில் உள்ள...