பிக்குகளுடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்து மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கான அத்திவாரத்தைப் பொலிஸார் இடுகின்றனர் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வெடுக்குநாறிமலையில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களைக் கைது செய்திருப்பதுடன், கோயிலுக்குள் சப்பாத்துக் கால்களுடன் சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிவ பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் பொலிஸாரின் செயற்பாடுகளைக் கண்டித்தும், அங்கு பௌத்த பிக்குகளின் தலைமையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட...
  மக்களின் காணி நிலங்கள் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (10.03.2024) யாழ். மாவட்ட...
  ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன் எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அதேபோல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் மகளிர்...
  252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார். Asprin tablet 300m, Diazoxime tablet 50mg, Trimethoprim tablet 100 mg உள்ளிட்ட பல்வேறு மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதைய சுகாதார...
  பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும் தேசிய மகளிர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை வெளியிடப்படவுள்ளது. பாலின சமத்துவக் கொள்கைகள் இந்த சட்டமூலமானது, பெண்களின் முன்னேற்றம் மற்றும் வலுவூட்டலுக்கான தேசிய கொள்கையை வகுப்பதன் மூலம் பல்வேறு துறைகளிலும் பாலின சமத்துவக் கொள்கைகளை நிறுவ...
  ஐக்கிய தேசியக் கட்சிதேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர் பட்டியல் இந்த கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நவீன் திஸாநாயக்கவிற்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பேச்சாளர் பட்டியலில் இடமில்லை என்ற காரணத்தினால் நவீன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மன்னிப்பு கூட்டத்தில் பங்கேற்காமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக நவீன் திஸாநாயக்க டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பேச்சாளர் பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என நவீன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் கட்சியில்...
  நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கலந்துரையாடலில் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரியவருகிறது. அதில் ஆர்வமுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு கணக்கிடுவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றதை கலைக்க திட்டம் எவ்வாறாயினும், இரு கட்சிகளின் சிரேஷ்டர்களின் கலந்துரையாடலில் எழுந்துள்ள விடயங்களை கட்சி தலைவர்களிடம் முன்வைத்து இறுதி...
  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) முதல் கால அட்டவணைக்கு அமைய தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகும்புர தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சங்கத்தின் செயலாளர் நிலங்க சந்தருவன் இதனை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். கால அட்டவணையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை இது தொடர்பில் நிலங்க சந்தருவன் மேலும் தெரிவிக்கையில், டிசம்பர் 18, 2023 அன்று எங்களுக்கு...
  சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார். சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க செயின் ஒன்றே இவ்வாறு தவறவிடப்பட்டுள்ளது. ubar வலையமைப்பு ஊடாக பதிவு செய்யப்பட்ட சம்பத் என்ற சாரதியின் முச்சக்கர வண்டியில் குறித்த பெண் பயணித்துள்ளார். நேர்மையான சாரதி எனினும் பாதிக்கப்பட்டவர்கள் ubarயை தொடர்பு கொண்டு சம்பத்...