உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குவது சம்பந்தமாக ஜேர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் அடங்கிய குரல் பதிவை ரஷ்ய ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் உருவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மிகவும் கோபமடைந்துள்ள ஜேர்மனிய சான்சலர் ஓலஃப் ஷோல்ஸ்,இராணுவ அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் மற்றும் புலனாய்வு தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...
  ஆடம்பர கப்பல் ஒன்றின் விருந்தினர் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்திய பணியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தின் மியாமி நகரை மையாகக் கொண்டு இயங்கி வரும் ஆடம்பர பயணிகள் கப்பல் சேவை நிறுவனத்தின் கப்பல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண்கள் உடை மாற்றுவதனை கணொளியாக பதிவு செய்யும் நோக்கில் இந்த பணியாளர் இரகசிய கமராவை பொருத்தியுள்ளார். 34 வயதான ஏர்வின் ஜோசப் மிராசொல் என்ற பணியாளரே இவ்வாறு கைது...
  கனடாவில் வட்டி வீதங்களில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது பேணப்பட்டு வரும் வங்கி வட்டி வீதமான ஐந்து வீதம் தொடர்ந்தும் அதே அளவில் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின், பணவீக்க நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கொள்கைகள் வகுக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வட்டி வீதங்களை குறைப்பது தற்போதைக்கு பொருத்தமற்றது என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் நடுப்பகுதி வரையில்...
  கனடாவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் நிதி புலனாய்வு பிரிவு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடிய பொலிஸ் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விடவும் தற்பொழுது மிக எளிதில் கனடாவின் பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் சைபர் தாக்குதல்கள்...
  அநுர குமார திசாநாயக்கவுக்கும் 06 நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (06.03.2024) மக்கள் விடுதலை முன்னனியின் தலைமையகத்தில் நடைப்பெற்றுள்ளது. பொருளாதார நிலைமைகள் இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இராஜதந்திரிகள் விழிப்புணர் வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய...
  ரணில் - ராஜபக்ச அரசு ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டை அழிக்கின்ற இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்குப் பொதுமக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் எனவும் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று (06.03.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "எதிர்வரும் 8 ஆம் திகதி...
  08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாரிய போராட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளீர்தினம் மற்றும் 55 ஆவது ஜக்கியநாடுகள் சபைக்கூட்டத்தொடர் நடைபெற்றவுள்ளது. இந்த நிலையில் பெண்கள் ஆகிய நாங்கள் எங்கள் உறவுகளை தேடிவருவதுடன் அடிமைத்தனமாகவே இலங்கையில் வாழ்ந்து...
  வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு நேற்று(06.03.2024)கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர் இல்லம் இந்நிலையில், வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின்...
  சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் (06.03.2024) அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி. முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சூரிய மின்கலத் திட்டம் அவர் மேலும் கூறுகையில், "வடக்கு மாகாணத்தில் சீன நிறுவனத்துக்குச் சூரிய மின்கல திட்டம் வழங்கப்படவும் இல்லை, சீன நிறுவனம் அவ்வாறான கோரிக்கைகள் எதனையும் விடுக்கவும் இல்லை. அதேபோல் வடக்கு...
  இலங்கை, ஏனைய நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் நிலையில், இராஜதந்திர உறவுகள் - இதயங்கள், மனம் மற்றும் ஆன்மாக்களின் இணைப்புகளாக மாறவேண்டும் என்று இலங்கையின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமெரிக்க அமைதிப் படையின் தொண்டர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்விலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.இலங்கையர்களுக்கான வாய்ப்பு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஒரு தேசத்தின் குணாதிசயம் அதன் புவியியல், காலநிலை,...