மீபாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார்.
இதன்போது அருகில் இருந்த ஒன்றரை அடி கொங்கிரீட் கல் அவரது கன்னத்தில் பலமாக மோதியுள்ளது.
பலத்த காயமடைந்த மாணவி
இதில் பலத்த காயமடைந்த காரணத்தினால், மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து...
தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி...
நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தை அதிகரித்தல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரச வருமானத்தை அதிகரித்தல் தொடர்பில் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டால் யோசனைகளை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க முடியும்.
செலவுகள் மற்றும் வருமானமீட்டல் என்பனவற்றை டிஜிட்டல் முறையின் ஊடாக மேற்கொள்வதன் மூலம் அனைத்து...
நாட்டு மக்களுக்கு காணப்படும் ஒரே மாற்று வழி ரணில் தலைமையிலான அரசாங்கம் அல்ல.-ஹரினி அமரசூரிய
Thinappuyal News -
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டை யாரும் பொறுப்பேற்காத காரணத்தினால் தீயில் பாய்ந்து நாட்டை காப்பாற்றியதாக ரணில் கூறுவது முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கூற்றுக்களின் மூலம் நாட்டில் ரணிலைத் தவிர்ந்த வேறு மாற்று வழியில்லை என்ற ஓர் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு காணப்படும் ஒரே மாற்று...
கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வினை நடத்தியுள்ளது.
சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான கத்தரிக்காய் வகைகளில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கிருமிநாசினிகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இரசாயனத்தை எவ்வாறு நீக்குவது?
மரக்கறி மற்றும் பழ வகைகளை குளிர்ந்த நீரில் கழுவுவதனை விடவும், குளிர்ந்த நீருடன் வினாகிரி அல்லது உப்பு சேர்த்து கழுவுவதன்...
சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க நடவடிக்கை எடுத்தும் பலனளிக்கவில்லை: அலி சப்ரி விளக்கம்
Thinappuyal News -
சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும், புற்றுநோய் அவரைப் பலிகொண்டுவிட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.03.2024) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றும்போது சாந்தனின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்து உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
"சாந்தன் இந்தியாவின்...
13வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் தனக்கு பயிற்சியளித்த கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்து பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு பயிற்றுவித்த கடற்படை அதிகாரியின் கனவாக இருந்தது அவரது சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது அது எனக்கு பாரிய உந்து சக்தியாக இருந்தது.
அவர் பயிற்றுவித்த நால்வருமே பாக்கு நீரினை வெற்றிகரமாக கடந்துள்ளனர். ஆனால் கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இவர் போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல்...
சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி
இந்நிலையில், வைத்தியர் சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்து.
குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காக தற்போது அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு...
பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன நேற்று இதனை அறிவித்தார்.
பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றினை கருத்திற்கொண்டு, அந்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை...
பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி-கம்மன்பில
Thinappuyal News -
இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி பசில்
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! ஆனால் இந்த வகையான சுற்றுலாப் பயணிகளை நாங்கள் விரும்புவதில்லை என பசிலை கடுமையாக விமர்சித்தார் உதய கம்மன்பில.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதில் மகிழ்ச்சி
பசில் ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், பொதுத் தேர்தலை ஏற்பாடு செய்வதற்காகவா. அதைப் பற்றி உங்கள்...