சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய பிரதேசங்களில் கடந்த வாரம் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த நடவடிக்கையில் , உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஆகியவற்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த காலாவதியான சோடா மற்றும் காலாவதியான பானங்கள் என்பன மீட்கப்படிருந்தன. நீதிமன்றில் வழக்கு...
  இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இன்னும் இந்த நாட்டிலே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இளைஞர்களுக்கு அநீதி நடக்கிறது. உல்லாசமாக 450 CC க்கு மேல் வேகமாக போக முடியாது என்பது உங்களது கண்ணுக்கு...
  பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடுமையாக சாடியுள்ளார். சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ''நாதியற்ற நபராக இருந்தவர் வேறு யாரும் இல்லை இந்த பசில் ராசபக்ச. அவரை வரவேற்பதற்காக அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர். நாட்டை விட்டு ஓடியவர் விமானங்கள் இல்லாது அங்குமிங்கும் ஓடி திரிந்த இந்த நபர்...
  ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் மகனை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரை ஊவா மாகாண ஆளுநரின் மகன் தாக்கியதாகவும், குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை இதேவேளை, சந்தேகநபரை கைது செய்ய சென்ற...
  உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிப்பதன் மூலம் எந்தவொரு பயனும் இல்லாத காரணத்தினால் நீதிபதி சரவணராஜாவை தொடர்ந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் முக்கிய பொலிஸ் அதிகாரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு பொறுப்பில் இருந்த முக்கிய பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக, பாதாள குழுக்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் நாட்டுக்கு தப்பியோடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
  5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறுபொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
  கல்தொட்ட வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து மீது மரக்கிளை ஒன்று வீழ்ந்த போதிலும் தெய்வாதீனமாக மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் சாமர்த்தியத்தினால் நொடிப்பொழுதில் மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பேருந்தின் மீது கிளை விழுந்த போது, மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பேருந்திற்குள் இருந்தனர். சாரதியின் செயல் மரத்தின் கிளை முறிந்து கிடப்பதை கண்ட பேருந்து சாரதி பேருந்தை உடனடியாக பாதுகாப்பாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளை...
  முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சினால் இந்த யோசனை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. விலை அதிகரிப்பு சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு குறித்து நேற்றைய தினம் அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது, இதற்கமைய முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 30 ரூபா செலவாவதாகவும், நாட்டில் நாளொன்றுக்கு 5.8 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதகாவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளொன்றில் நாட்டின் முட்டை தேவை 7.5...
  அரசாங்கத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்''அடுத்த மாதம் 21ம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றது. விபரங்களை ஆராயவில்லை தாக்குதலில் பின்னர் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல விசாரணைகளை முன்னெடுத்தன. ஆனால் இந்த விசாரணைகள் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த அனைத்து விபரங்களையும் ஆராயவில்லை. இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்...
  குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு, குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். பிரேத அறை மேலும், இறந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே,...