தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மாவை சேனாதிராஜா தனது 19 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி 83 வயது வரை முழுநேர அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.போருக்கு...
  நூருல் ஹுதா உமர் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றிய தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித் தலைவர் எம்.ஏ.நளீர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மேலும், தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால்தான் தமது...
  நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து பெரும் பங்காற்றிய சரித்திர நாயகன் மாவை சேனாதிராசா அவர்களின் மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்...
  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கட்சியின் பொருளாளர்...
  மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையில் ஆரம்ப கல்வியும் நடேஸ்வராக் கல்லூரியிலும் உயர்தரக்கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியலில்… இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை...
  தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஓரணியில்! பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், அனுராத ஜயரத்ன, சாணக்கியன, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர்...
  திசைகாட்டி ஆட்சிக்கு வந்து 114 நாட்களே... என்ன செய்தார்கள்... தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்ற பின்னர் 2025 ஜனவரி 14 ஆந் திகதியளவில் கழிந்த 114 நாட்கள் காலப்பகுதியில் நிகழ்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு அளித்த அரசியல், கலாசார, சமூக மற்றும் பொருளாதார வெற்றி பற்றி சுருக்கமாக அசைபோட்டுப் பார்ப்போம். 01. ஜனாதிபதி வெற்றிபெற்ற பின்னர் நடைபெற்ற உறுதிப்பிரமாணம் செய்கின்ற வைபவம் பண...
  அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகரசபை வளாகத்திற்குள் வைத்து இன்று  பிற்பகல் அர்ச்சுனா எம்.பி அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அண்மையில் தொடுக்கப்பட்ட வழக்கினை காரணம் காட்டியே பொலிஸார் அவரை கைது செய்திருப்பதாக தெரிய வருகிறது. சாவகச்சேரி நகரசபை அதிகாரிகளுடன் வர்த்தக நிலைய குத்தகை தொடர்பாக கலந்துரையாட வந்த நிலையிலேயே அவர்...
  தமிழ்நாடும் ஈழமும் மொழியாலும் பண்பாட்டினாலும் ஒன்றுபட்ட நிலங்கள். உணர்வால் மாத்திரமின்றி தொன்மையான வரலாறு வழியாகவும் தமிழ்நாடும் ஈழமும் தாயும் சேயுமாக கருதப்படுகிறது. நிலவமைப்பிலும் தமிழ்நாட்டின் குழந்தையாகவே இருக்கிறது ஈழம். இந்த வரலாற்றுப் பின் பின்புலத்தில் தான் ஈழப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் கரிசனை அதிகமாகக் காணப்பட்டது. இலங்கையில் கடுமையான இன ஒடுக்குமுறை சூழல் தலைவிரித்தாடிய நிலையில் இந்தியாவின் தலையீடும் உதவியும் தேவை என்பதை தமிழ்நாடும் ஈழப் போராளிகளும் வலியுறுத்தியிருந்தனர். தனி ஈழம் இதனால்தான் ஒரு கால...
  அரிசித் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்திற்கும் கடந்தகால அரசாங்கங்களே காரணம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குற்றச்சாட்டு கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இவ் நெல்வினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும், விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது. எதிர்வரும் காலங்களிலே இவ்வகையான தட்டுப்பாடு ஏற்படாது என்பதுடன், அதற்கான நடவடிக்கையினை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட...