பெண் ஒருவரை தாக்கி, காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மகன் பொலிஸில் சரணடைவார்: ஊவா மாகாண ஆளுநர் உறுதி
Thinappuyal News -0
தனது மகன் மொஹமட் இசாம் ஜமால்தீன் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மாட்டார் என்றும், நாளை பொலிஸார் முன்னிலையில் பிரசன்னமாவார், என்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது மகன் தலைமறைவாகவில்லை செவ்வாய்க்கிழமையோ அல்லது அதற்கு முன்னதாகவோ பொலிஸில் சரணடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதை பொலிஸாரே ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கொழும்பு ஹெவ்லாக் டவுனில்...
தேசியத்துக்கும்,பௌத்த மதத்துக்கும் அதேபோல் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் நபர் தான் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக...
அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையினைச் சேர்ந்த அருட்தந்தை டிலான் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(04.03.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் இன்று மன்னார் மடு தேவாயத்தில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு விட்டு திரும்புகையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் - அடம்பன் பகுதியூடாக...
சாந்தனுடைய மரணமானது இந்திய புலனாய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்திய புலனாய்வாளர்களின் நோட்டமிடல் தற்போது அதிகரித்துள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழர் பகுதியின் செயற்பாடுகளை புலனாய்வாளர்கள் ஊடாக இந்தியா கவனித்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் மக்களின் நிலைமையை இந்தியாவால் மாற்ற முடியவில்லை. மாற்றவும் முடியாது என்பதை சாந்தனின் இறுதி...
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த ஆதி சிவன் ஆலயத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்துள்ளனர்.
எனினும், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் அதற்கு நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என்று நெடுங்கேணி பொலிஸாரால் ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை வழிபாடுகள்
இதனையடுத்து, வவுனியா...
மனிதனின் உடல் இறப்பிற்கு பின்னர் முழுவதுமாக மண்ணிற்கே சொந்தம் சாந்தனின் அடக்கத்தின் இறுதி நிமிடம்
Thinappuyal News -
சாந்தனின் இறுதி தருணங்களில் வழமைக்கு மாறாக அவருடைய பூதவுடல் முழுவதுமாக விபூதியால் நிரப்பப்பட்டிருந்தது.
தெய்வீக உணர்வு
இந்நிலையில் சாந்தனின் பூதவுடலை பார்க்கும் போது ஒரு தெய்வீக உணர்வையே ஏற்படுத்தியதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.
மேலும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவரின் உடல் அடக்கம் செய்வதை போன்று சாந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு பூதவுடலை அடக்கம் செய்யும் போது அதை முழுமையாக விபூதியால் நிரப்பியது,...
நான் சாந்தன் பேசுகின்றேன்!
ஆம் தாய்நாட்டையும் தாய்முகத்தையும் பார்க்காமலே விண்ணுலகம் சென்றேனே அந்த சாந்தன் பேசுகின்றேன்.
கைதாகி 33 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேனே அந்த சாந்தன் பேசுகின்றேன்.
ஈழத்தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா? ஈழத்தில் பிறந்தது ஒரு குற்றமா? இல்லை தமிழழகத்தை எங்கள் சகோதர நாடு என்று கருதியது ஒரு குற்றமா?
குடும்ப வாழ்வோ, தாய் பாசமோ, தாய் மண் வாசமோ அறியாமல் சிறைவாசத்தில் இறந்து போனேனே யாரை நான் குற்றம் சொல்ல?
சிறைவாசம் 33...
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 13வயது சிறுவன் தன்வந்தை திருகோணமலை மாவட்டத்திற்கு வரவேற்கும் நிகழ்வு இன்று (04) காலை இடம்பெற்றது.
இன்று காலை அவர் கல்வி கற்ற திருகோணமலை இ.கி.ச ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சமூகத்தினரால் அவர் வரவேற்கப்பட்டு அங்கு ஒரு பாராட்டு நிகழ்வும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து திருகோணமலை நகர பாடசாலைகளும் அவரை வரவெற்று கௌரவித்து தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
சாதனைச் சிறுவன் தன்வந்த்
இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30கிலோ மீற்றர்...
பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை, என்றாலும் அதிபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு போதிய பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று (03) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
“பால் தேனீர், தேனீர், தின்பண்டங்கள், சிற்றூண்டிகள், சாப்பாட்டுப் பொதிகள், கொத்து போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
விலை அதிகரிப்பு கலாசாரம்
24 மணி நேரமும் 365 நாட்களும் நாட்டில்...
பலரின் கண்ணீருக்கு மத்தியில் மயானம் நோக்கி எடுத்துச்செல்லப்படும் சாந்தனின் புகழுடல்
Thinappuyal News -
தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது.
உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.
சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது.
அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்று வருகிறது.
இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக...