நடிகை ரெஜினா, தமிழில் சில படங்களே நடித்து மக்களிடம் பிரபம் ஆனவர். கடந்த 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் முதலில் நடித்துள்ளார். அதன்பின் அழகிய அசுரா படத்தில் நாயகியாக அறிமுகமானவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடிக்க பெரிய அளவில் பிரபலம் ஆனார். இப்படத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்பு...
  சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். குணா குகையை சுற்றி பார்க்க செல்லும் நண்பர்களுக்கு நடக்கும் அதிர்ச்சி சம்பவம் தான் இப்படம். இப்படத்தில் கமல் ஹாசனின் குணா படத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார் கமல். அதுமட்டுமின்றி படக்குழுவினர்களிடம் உரையாடினார். அப்போது குணா படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை கமல், மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவுடன் பகிர்ந்துகொண்டார். மண்டை ஓடுகளை பயன்ப்படுத்திய கமல் இதில்,...
  கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக படம் ஓடுகிறது. கேரளாவில் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்கிறார், அவரை எப்படி மீட்டார்கள் என்பதுதான் கதை. பட வசூல் தமிழ்நாட்டில் நடந்த கதை என்பதால் இங்கேயும் வசூலை குவித்து...
  விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். Goat படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம் தளபதி 69. இதன்பின் அவர் அரசியலில் முழு நேரத்தை செலவிடப்போவதாக கூறியுள்ளார். தளபதி 69 படத்தை இயக்கப்போவது...
  அமெரிக்காவில் கடந்த 7 ஆண்டுகளாக இளம்பெண்ணொருவரை வீட்டிற்கு அடைந்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில் மோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. குறித்த மோட்டலின் அறை ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனை கவனித்த மிச்சிகன் பொலிஸார் உடனடியாக சென்று அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது அங்கு இளம்...
  எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அடிக்கடி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதும் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதும் அரங்கேறி வருகிறது. சுமார் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில், கடந்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் (04.04.2024) ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த (08.02.2024) ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். அவர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பலம் இல்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின தலைமையிலான பாகிஸ்தான் மக்கள்...
  உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த (24.02.2024) திகதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன.ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர்...
  காஸாவில் போர் நிறுத்தம் வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் உயிரை மாய்த்துக் கொண்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த(07.10.2023) இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே தொடங்கிய போர் 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்விடத்தைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இப்போரில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இருப்பினும் காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில்...
  கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு வரையில் இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வீடு கொள்வனவு செய்வோரை ஊக்குவிக்கு;ம நோக்கில் கடந்த 2019ம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகம்...