கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாங்கள் நாட்டுக்குள் பிரவேசித்து முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இவ்வாறு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லதொரு வாழ்க்கையை எதிர்பார்த்து கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகள் அதிருப்தியுடன் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 35 ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற குடியேற்றங்கள் தொடர்பிலான ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கனடாவிற்குள் பிரவேசித்து ஐந்து ஆண்டுகளுக்குள் சுமார் 5.1 வீதமானவர்கள் வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குடியேறிகளை தக்க வைத்துக் கொள்வதற்கான மூலோபங்களை...
கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் அவர்களை மகிழ்வித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருகின்றார்.
ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் கடந்த சில ஆண்டுகளாகவே இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றார்.
இசை ஆல்பங்களின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை ஆட்டிசிம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சைகளுக்காக...
ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த தடை குறித்து அறிவித்துள்ளார்.
ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் சிறையில் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து கனடா கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
ரஸ்யா அரசாங்கம் தொடர்ச்சியாக திட்டமிட்ட அடிப்படையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ரஸ்ய அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக தடைகள்...
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை குறித்து போலியான தகவல்கள் பரவியதை அடுத்தே செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம் கே சிவாஜிலிங்கம் நேற்று (02.3.2024) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவு
இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்புக்காக கடந்த...
கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலும் அவருடன் பயணம் செய்த கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரியில் கல்வி கற்கும் தனது மகளைப் பார்வையிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் கொழும்பு பிரதான வீதியில் நாவலடியில் வைத்து மோட்டார் சைக்கிலுக்கு குறுக்கே நாய் பாய்ந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்...
கரந்தெனிய பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருபாபில பிரதேசத்தில் இன்று அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவன் குமார என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவி தனது கணவரின் கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கியதாகவும், தாக்குதலுக்குள்ளானவர் வீட்டில் இருந்து வெளியே வந்த வீட்டருகே இறந்து கிடந்ததாகவும் பொலிஸார்...
தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றையதினம் (03.01.2024) தாவடி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலதிக விசாரணைகள்
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு கரைவலை தொழில் சங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருடன் முறுகல்
எனினும், தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை கரைவலை வாடி கடற்றொழிலாளர்களினால் அந்த பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சம்பவ இடத்தில் அதிகளவான கடற்றொழிலாளர்கள் ஒன்று...
தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்...
ஆர்மர் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று(03) நள்ளிரவு 12: 29 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சொத்துக்களுக்கு சேதம்
திடீரென உணவகத்திற்குள் நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் பொல்லுகளால் உணவகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.
உணவகத்திற்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நுழைந்த விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சிசிரிவி காட்சிகள்
அந்த கும்பல் உணவக உடைமைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட...