மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக பெறப்படும் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்வதும் இன்று (04) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
  இலங்கை தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டம் ஆத்திமோட்டை பகுதியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது, நேற்றையதினம் (03.03.2024) மாலை 5.00 மணியளில் நடைபெற்றுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வில், மாவட்ட கிளையின் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் முருகதாஸ், ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். புகழுடலுக்கு அஞ்சலி மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் தற்போது அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அஞ்சலிக்காக யாழ். வல்வெட்டித்துறையில்...
  சாந்தனின் உடலுக்கு அவரது இல்லத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.. தாய் நாட்டிற்கு சென்று அம்மாவின் கையில் ஒருவேளை உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த சாந்தன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை பெற்று கடவுச்சீட்டை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இந்திய - இலங்கை அரசுகளது கூட்டு சதியால் காவு கொள்ளப்பட்ட சாந்தனின் புகழுடல் அவன் நேசித்த மண்ணிற்கு வந்திருக்கின்றது. இறுதி...
  அரசியல் தீர்வை இந்தியாவால் பெற்றுத்தர முடியுமென்ற நம்பிக்கை சாந்தனின் சிறை மரணத்தால் பொய்ப்பித்துள்ளது என வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தின் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பினால் சாந்தனின் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வல்வெட்டித்துறைக்கென்று தனிப்பெருமையுண்டு. தீருவிலிற்கு அதனை விட தனித்து பெருமை உண்டு. தீருவில் மண் இந்திய இலங்கை கூட்டுச்சதியால் படுகொலை செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளதும் பின்னராக...
  வெப்பநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக காலி கராபிட்டிய மருத்துவமனையின் உளவியல் சிகிச்சைப் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றது. அநேகமான பகுதிகளில் நிலவி வரும் அதிக வெப்பநிலையானது திடீர் விபத்துக்களை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உளவியல் நோய்கள் அதிகரிக்கும் வெப்பநிலை அதிகரிப்பினால் உளவியல் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் உளவியல் நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வெப்பநிலை...
  எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி...
  சாந்தன் அனுபவித்த ஆயுள் தண்டனையை இனி தமது ஆயுள் முழுவதும் அந்த குடும்பம் அனுபவிக்கும் அவலநிலை உருவாகிவிட்டது. கடைசி ஆசை பெரும் குற்றங்களை இழைத்த தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை நிராசையாக போவது அரிதான விடயமாக இருக்கும் போது ஒரு குடும்பமே சாந்தனின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தில் வாழும் நிலை உருவாகிவிட்டது. சாந்தன் தனது தாயை பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்கம் என...
இந்தவார தினப்புயல் பத்திரிகையைப் பார்வையிட… thinappuyalnews-03.03.2024  
  சாந்தன்மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது. அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே காரணம் என்று சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். சாந்தன் இலங்கை திரும்புவதில் ஏற்பட்ட தாமதங்கள் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த 22ஆம் திகதி திருச்சி மாவட்ட ஆட்சியாளருக்கு மத்திய அரசாங்கம் சாந்தனை நாடு...
  அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று(01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. உயிரிழப்பு இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில்...