கனடாவில் கனரக வாகனப் போக்குவரத்துச் சேவை மேம்படுத்தப்படும் என ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் உறுதியளித்துள்ளார். கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் 'ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின்' வருடாந்த மாநாடு நேற்றைய தினம் மிசிசாகா நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. மேற்படி மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் இந்த உறுதிமொழியை...
  காஸாவிற்கு உதவிகளை விமான வழியாக வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், உதவித்தொகை வழங்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. காஸாவுக்கு அதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தற்போது வழங்கப்பட்டுள்ள உதவி போதாது எனவும் ஜோ பிடன் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தொடர் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். காஸாவிற்கு கடல் உதவி வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும்...
  நேற்று முன் தினம் வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவரது இறப்பு என ஈழத்மிழர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இலங்கை தமிழர்களுக்கு உரிமை உள்ளது கொன்சர்வேர்ட்வ் கட்சியின் அரசாங்கத்தின் பிரதமராக பதவி...
  தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாதம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி திருப்பி அனுப்பினார். இன்று தன் மகனை ஒருமுறையேனும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 வருடமாக காத்திருந்த சாந்தனின் தாய்க்கு உயிரற்ற மகன் உடலை தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் மு.க ஸ்டானின் அனுப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் இந்த இரண்டு தாய்களின் பெயரையும்...
  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, வெளிநாட்டில் நடைபாதை இருக்கையில் தனியே அமர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஒருகாலத்தில் சிங்கள மக்களின் தேவதையாக தோன்றிய சந்திரிக்கா , இன்மத பேதமின்றி இலங்கை மக்களிடையே சமாதானம் தான் வேண்டும் என கூறி இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபோது மிகவும் நல்லவராகவே தோற்றமளித்தார். வெளி உலகிற்கு தெரியவந்த சந்திரிகாவின் கோர முகம் இலங்கை அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த ஓர் கொடிய மிருகமாகவே சந்திரிக்கா இருந்தார் ....
  டொக்யார்ட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலமொன்று இன்று (01) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நீண்ட நேரம் கடலில் மிதந்துகொண்டிருந்ததை அவதானித்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் கடலுக்குள் சென்று சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். மேலதிக விசாரணைகள் உயிரிழந்தவர் தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் தெரியவரவில்லை. அதன் காரணமாக இதுவரை சடலத்தை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை இனங்காணப்படாத நிலையில் இடது...
  இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி பிரதேச பொதுமக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (01.03.2024) திருக்கோவில் பிரதேச செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானம் இல்மனைட் அகழ்வுக்கு தடைசெயயப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி மீண்டும் அகழ்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதை அறிந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், உட்பட...
  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனையில் சட்ட விரோதமாக ஒன்று கூடிய குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேர் இன்று(01) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான நபரான ஸஹ்றான் ஹாசிமுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நாலு பேர் உள்ளடங்கியிருந்தனர். சுயாதீன விசாரணைகள் அதனையடுத்து ஐ.எஸ் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்குடன் அவர்கள் சதித்திட்டமொன்றை தீட்டும் நோக்கில் ஒன்று...
  முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலர் உணவுப் பொதிகள் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் இன்றையதினம் (01.03.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அதேவேளை, நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், ஏயிரிழை...
  பூந்தோட்டம் பகுதியில் புதிய மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா, பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். உரிமை கோரி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி இதனையடுத்து பூந்தோட்டம் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் குறித்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. கிராமமட்ட பொது அமைப்புக்கள் என்று உரிமை கோரி ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளில் பூந்தோட்டம் சந்தியை பிரதானமாக்...