வரிப்பணத்தில் மாதாந்தம் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல எனவும், மக்களுக்கான சேவகர்கள் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று(01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி குறைக்கப்பட்டுள்ள நிலை இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களுக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய மக்களுக்கான...
  யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை (03.03.2024) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. “இந்திய -திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனிற்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. தாமதத்திற்கு காரணம் ஒன்றரை வருட போராட்டத்தின் பின் தமிழக அரசு இலங்கைகக்கு...
  நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சர்வதேச நீதி விசாரணை சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், ''எல்லா பிரச்சினைக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள்,தமது உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். முன்னதாக இலங்கை அரசு தமிழருக்கு...
  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்வர்களில் ஒருவரான மொஹமட் இஷாம் ஜமால்டீனின் தாக்குதலினால் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஹெவ்லொக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பெண் மீது தாக்குதல் குறித்த நபர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பெண்ணை தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பெண் கொழும்பில்...
  சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக பிரித்தானியாவில் இருந்து முருகனின் உறவினர்கள் வருகை தந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார். சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் எமது லங்காசிறி செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 32 ஆண்டுகள் இவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். ஆகவே இவர்களை விடுதலை செய்கிறோம் என்று கூறிய பின்பு (12.11.2022) சிறப்பு முகாமில் ஏறக்குறைய ஓர்...
  சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. அதிகபட்ச மாதாந்திர மதிப்பு இந்த அறிக்கையின் படி, ஜனவரி 2020க்கு பிறகு நாடு கண்ட அதிகபட்ச மாதாந்திர மதிப்பு இதுவாகும். இதேவேளை 2023 டிசம்பரில் 269 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2023 ஜனவரியில் 154 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஜனவரியில் இலங்கையின்...
  தினேஸ் குணவர்தன பயணித்த உலங்குவானூர்தி மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தவறினால் மாத்தறை விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலின் இறுதிச் சடங்கிற்கு பிரதமர் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கடலில் இருந்து பலத்த காற்று வீசியதால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் விளக்கமளித்துள்ளார். சம்பவம் நடந்தபோது, ​​உணவு, பானங்கள் பெற்றுக்கொண்டிருந்த உள்ளூர்...
  கித்துல்கல பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் இருந்து கீழே விழுந்த கைக்குழந்தையின் உயிரை காப்பாற்றியமை மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளார். மாத்தறையை சேர்ந்த ருவன் சஜித் குமார் சூரியஆராச்சி என்ற இளைஞனே இந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார். நாங்கள் குடும்பமாக ஸ்ரீ பாத சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரவு உணவு சாப்பிட இடம் தேடினோம். குழந்தை மீட்பு அப்போது நள்ளிரவு 12 மணியை நெருங்கிவிட்டது. கித்துல்கல வீதியில் ஏதோ துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. எனினும் அதற்கு...
  அரசாங்கத்தை கொண்டு நடாத்த போதியளவு பணமில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முழுவதிலும் அரசாங்க திறைசேரிக்கு மூன்று ட்ரில்லியன் ரூபா பணம் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவற்றில் இரண்டு ட்ரில்லியன் ரூபா அரசாங்க கடன் செலுத்துகைகளுக்காக செலவிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடன்களுக்கு வட்டி நாட்டுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்காக வட்டியாக இரண்டு ட்ரில்லியன் ரூபா செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே செலவுகளை மேற்கொள்வதற்கு கடன்...
  அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது.அதற்கேற்ப 01 கிலோ கிராம் சிவப்பு அரிசியின் சில்லறை விலை தற்போது 150 முதல் 160 ரூபா விற்பனை செய்யப்படுகின்றது. தற்போதைய நிலவரத்தை பொறுத்து மற்ற அரிசி விலைகளும் எதிர்காலத்தில் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.