மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடும் மோதல் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்டதன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
  மகன் வருவான் என்று கோவில் தீர்த்தத்துடன் காத்திருந்த தாய்க்கு வாழ்நாள் ஏக்கம் கனவாய்ப் போனது என சாந்தனின் மரணம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ''தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, முழுமை பெறாத நீதி விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களில் ஒருவராக 33 ஆண்டுகள் சிறைவாழ்வை அனுபவித்து...
  சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் மைத்துனர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளனர். இந்தநிலையில், சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவரது குடும்பத்தார் லங்காசிறிக்கு வழங்கிய...
  சாவகச்சேரி - மீசாலை பகுதியில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் பரணீதரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதிய பேருந்து பாடசாலை ஒன்றில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவனுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவனை காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...
  மேல் மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக 2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தக் குழு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார். அதன்படி இங்கு ஆரம்பக்கல்வி, கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் மற்றும் பொதுக் கல்விப் பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செயலாளர் தெரிவித்தார். இதேவேளை...
  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் சட்ட உதவி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார். பொலிஸார் தங்கள் கடமைகளைச் செய்யும் போது எதிர்க்கொள்ளும் சட்டச் சிக்கல்களுக்காக தனிப்பட்ட சட்ட உதவியைப் பெற இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது கடமைகளின் எல்லைக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில்...
  மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட "பயிற்சி புத்தகம்" தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்விச் செயலாளர் வசந்தா பெரேரா வழிகாட்டுதல்கள் சிலவற்றை வௌியிட்டுள்ளார். பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே மாணவர்களின் புத்தகப் பைகளின்...
  மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் பிரதீப் சபுதந்திரிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது...
  மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மார்ச் மாதத்திற்கான எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை, தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம்...