கனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் முல்ரொனி தனது 84ம் வயதில் காலமானார். கனடாவின் 18ம் பிரதமராக முல்ரொனி கடமையாற்றியுள்ளார்.
குபெக் மாகாணத்தின் Baie-Comeau ல் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பமொன்றில் முல்ரொனி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ஜோன் டெபின்பேர்க்கரின் ஆலோசகர் என்ற அடிப்படையில் முல்ரொனி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
1983ம் ஆண்டு கொன்சர்வடிவ் கட்சியின் தலைவராக தெரிவாகிய முல்ரொனி, 1984ம் ஆண்டில் கனடாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
முல்ரொனி தனது...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தேவையின்றி நோயாளர்களின் தகவ்லகளை பார்வையிட்டதாக மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டொக்டர் ஏஷ்லி ஜோன் மெர்காடோ என்பவரின் மருத்துவர் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் கடமையாற்றிய போது நோயாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொழில் ஒழுக்க நெறிகளை மீறியமைக்காக இவ்வாறு பணி இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் அனுமதியின்றி நோயாளர்களின் தகவல்களை பார்வையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட ரீதியில் தனக்கு...
கனடாவில் கனரக வாகனப் போக்குவரத்துச் சேவை மேம்படுத்தப்படும் என ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் உறுதியளித்துள்ளார்.
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் 'ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின்' வருடாந்த மாநாடு நேற்றைய தினம் மிசிசாகா நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
மேற்படி மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் இந்த உறுதிமொழியை...
சிறையல்ல சிறப்புமுகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பது போகப் போகத்தான் விளங்கியது என ராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்ட ஏழு தமிழர்களில் ஒருவரான இராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இன்றைய தினம் (29.02.2024) உலகத் தமிழர்களுக்கு எழுதியுள்ள முக்கிய கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து...
ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது.
தாயகக் கனவைச் சுமந்து, தனது இருபது வயதில் தாய்நிலம் பெயர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு 33 ஆண்டுகள் சிறைமீளப் போராடி, விடுதலையான பின்னரான இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாய்நிலம் திரும்பப் போராடி, அந்த ஏக்கம் தீராமலேயே உயிரிழந்திருக்கிற செய்தி, அத்தனை தமிழர்களையும் உறையவைத்திருக்கிறது.
இருபது வயது இளைஞனாக சிறைசென்ற தன்மகன், என்றோ...
10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை இன்று (29) மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் பிறப்பித்துள்ளார்.
நீதவான் விசாரணைகள்
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த கிராமத்தில் உள்ள...
திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை குறித்து ஆராய்வு
Thinappuyal News -
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் நேற்று (29.02.2024) மதியம் நடைப்பெற்றுள்ளது.
மகா சிவராத்திரி நிகழ்வு
இதன் போது எதிர்வரும் 8 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பாகவும், முன்னெடுக்கப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக...
இம்யுனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மனிதப் பாவனைக்கு உதவாத தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த இரண்டாம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற விசாரணை
அதன் பின் கடந்த 3ஆம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட போது பெப்ரவரி 14ம்திகதி வரை...
புளியங்குளம், புதூர் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது தொடருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்த த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடருந்தானது புதூர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மரணமடைந்த பெண்ணின்...
மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனினால் நேற்று(29.02.2024) ஆம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வீதி புனரமைக்கும் பணிகள்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் இவ்வாண்டிற்க்கான 1500 கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் அந்த வீதி காபெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
அந்தவகையில் 1180 மீற்றர் நீளமுள்ள குறித்த வீதியின் புனரமைப்பிற்காக 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதன்...