பாகிஸ்தானில் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு தனது கணவருடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் அவரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25-02-2024) இடம்பெற்றுள்ளது. அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் 'ஹல்வா' (அழகு அல்லது இனிப்பு என பொருள்) என அரபு மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த பெண் அணிந்திருந்த ஆடையில் இஸ்லாமிய மதப்புத்தகமான குர்ஆனில் உள்ள வாசகங்கள்...
  ஜப்பானைச் சார்ந்த கலைஞருடன் வாள் தயாரிக்கும் பயிற்சியில் மார்க் ஜக்கர்பர்க் ஈடுபட்டுள்ளார். ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் ஜக்கர்பர்க், பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளையும் புரிந்துள்ளார். பேஸ்புக், வாட்சப் , இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் என பல சமூக வலைதளங்களை வெற்றிகரமாக உருவாக்கி அதன் மூலம் மிகப்பெரிய சந்தையை வைத்துள்ள மார்க் ஜக்கர்பர்க் தனது வாழ்வியல் அனுபவங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவது...
  நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினர். இதனிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தது. தொடர்ந்து சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதில் ஹங்கேரி அரசு மட்டும் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி...
  அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார். அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் (Aaron Bushnell) கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் காஸாவில் இனப்படுகொலையை நிறுத்துமாறு கோரியும் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக தீக்குளித்தார். 25 வயதான ஆரோன் புஷ்னெல் அதனை நேரடியாக ஒளிபரப்பவும் செய்தார். பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணை போக மாட்டேன் என கோஷம்...
  கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் அதகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.பிரிட்டிஸ் கொலம்பியாவில் தற்பொழுது மணித்தியாலம் ஒன்றுக்கு 16.75 டொலர்கள் என்ற தொகை சம்பளமாக வழங்கப்படுகின்றது. ஜூன் மாதம் முதல் இந்த தொகை 17.40 டொலர்கள் என அதிகரிக்கப்பட உள்ளது. மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் 3.9 சதவீதத்தினால்...
  கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்துக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சஸ்கட்ச்வானின் பிரின்ஸ் அல்பர்ட் பகுதியைச் சேர்ந்த காயிஜ் ப்ராஸ் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி 13 மாதங்களான டான்னர் ப்ராஸ் என்ற சிசுவை குறித்த நபர் கடுமையாக தாக்கியுள்ள நிலையில் சிசு உயிரிழந்துள்ளது. இந்த பாதகச் செயலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு...
  கனடாவில் மோசடிச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அதிகளவான கனடியர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு மோசடிகள் எண்ணிக்கை அதிரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இகிவ்பெக்ஸ் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மக்கள் நிதி நெருக்கடிகள் ஏற்படும் போது சமூகத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என இகிவ்பெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் செரோல் பிரின்ஸ் தெரிவித்துள்ளார். மோசமானடிய முறையில் ஆள் அடையாள...
  கனடாவின் கான்வெல் நகரத்தில் குப்பை சேகரிப்பதில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளை திரட்டும் கைகள் இதுவரை காலமும் கறுப்பு நிறத்திலானவையாக காணப்பட்டன. எனினும் நகர நிர்வாகம் இந்த பைகளின் நிறத்தை வெளிப்படைத்தன்மையான பிளாஸ்டிக் (Clear Plastic) பொதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு வெளிப்படை தன்மையுடைய பிளாஸ்டிக் பொதிகளை பயன்படுத்துவது மக்களின் தனி உரிமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பையில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கும் வகையிலான பொதிகளை பயன்படுத்துவதன்...
  மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியில் கல்லூரியின் தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் இன்று(27.02.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு சபையின் புலமைப் பரிசில் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். அரசியல் தலையீடு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மத்திய கல்லூரியை அமரர் இராசதுரை எவ்வாறு வழிநடத்தியவர்...
  மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் அமைச்சரின் தேவையற்ற அரசியல் தலையீடு காணப்படுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டி உள்ளார். இது வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாளாக நான் பார்க்கிறேன் என்றும் அங்கஜன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நியமனம் தொடர்பில் சர்ச்சைகள் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், யாழ் மத்திய கல்லூரி அதிபர் நியமனம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி...