பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளைமுதல் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையேயான தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(27.02.2024) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வைத்தியசாலை சேவைகளுக்கு இடையூறு இது தொடர்பில் அவர் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் அழைப்பினை அடுத்து யாழ் மாவட்ட தூர சேவைச் சங்கத்தின் பேருந்து...
  பேருந்தின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த விபத்தில் 29 வயதுடைய சிலையடி - கற்சிலைமடு ஒட்டுசுட்டான் முல்லைத்தீவினை சேர்ந்த அழகராசா நிதர்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் இந்நிலையில், விபத்து தொடர்பில் பூரண...
  நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்து கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால்...
  யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருப்பதாகவும் வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில்,வறண்ட பிரதேசம் முழுவதும் யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாகும். யானை–மனித மோதல் நாடு முழுவதும் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% ஆகும். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம்...
  பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். விற்பனை வீழ்ச்சி தொடர்பில் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், பேக்கரி பொருட்களின் விலை உயர்வு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரிகளுக்கு வழங்கப்படாமை, ஒரு கிலோ மாஜரின் விலை 1000 ரூபாவாகவும் பட்டர் கிலோ 3000 ரூபாவாகவும் உள்ளூர்...
  கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ். செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. பண மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட கால பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி கட்டம்...
  சூரியவெவ பிரதேசத்தில் சந்தேக நபருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்ட சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூரியாவ கெலின்கந்த காட்டில் சந்தேக நபர் ஒருவர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். துப்பாக்கி சூடு அங்கு சந்தேக நபருக்கும் அதிரடிபடையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக உறுப்பினர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்...
  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்‌ச, கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகள் இந்நிலையில்,...
  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரது நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட ஞானக்காவினால் கட்டப்படும் சிவப்பு நூல் புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் கட்டியிருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொள்ளும் போது அவர் அந்த சிவப்பு நூலை அணிந்திருந்தமை மிக நன்றாக அவதானிக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் பிரித் நூலை மாத்திரம் கட்டிக்கொண்டிருந்தார். வாக்களிக்கும்...
  ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும் அவர் கோமா நிலைக்கு சென்ற நிலையில் இன்று காலை...