கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது
Thinappuyal News -0
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள தனது தந்தையிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை பெற்று கஞ்சாவை வாங்கி விற்பனை...
கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக நிலவும் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடன் செலுத்துவதில் எதிர்நோக்கும் சிக்கல் நிலை குறித்து கவனம் செலுத்தி மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி கடன்
தற்போதைய சட்ட நிலைமை காரணமாக...
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில்;
2024 பெப்ரவரி 28, 29 இரண்டு நாள் வேலைநிறுத்தமும்
யாழ் மற்றும் கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய இரு தினங்களும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள்...
காஸா வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 'காஸா சிறுவர்கள்' நிதியத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அனைத்து அமைச்சகங்கள் & அரசு நிறுவனங்கள் இஃப்தார் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, இந்த நிதியத்தில் பங்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் நன்கொடையாக 01 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உத்தியோகபூர்வ ஐ.நா முகவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயது வந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தனிநபர்களின்...
நமீபிய வீரர் ஒருவர் சர்வதேச T20 போட்டிகளில் அதிவேகமாக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
நமீபிய அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான நிகோல் லோஃப்டி ஈடன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
நேபாளத்துக்கு எதிராக இன்று இடம்பெற்று வரும் போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 11 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னர்...
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (27) மற்றும் மார்ச் 6 ஆம் திகதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தேர்தலுக்கான பணம் செலவிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும், குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு தேர்தல் கூட நடத்தப்படாத காரணத்தினால், குறித்த சட்டத்தின் விதிகள்...
பாறுக் ஷிஹான்
குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தினமும் கொத்தணியாக 300இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் சவளக்கடை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை, பாண்டிருப்பு ,...
அபு அலா
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 01 ஆம் திகதி தொடக்கும் 03 ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தலைமையில் 01 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டிகளில் 21 பழைய மாணவ அணிகள் பங்கேற்கவுள்ளது. இப்போட்டிகல் யாவும் பகல் நேரப் போட்டிகளாக இடம்பெறவுள்ளதாகவும், இச்சுற்றுப்போட்டியில்...