2024.02.23, 24, 25 ஆம் திகதிகளில் காலி போத்திவேல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர், கனிஷ்ட, சிரேஸ்ர விளையாட்டு போட்டியில் வ/வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
பா.கிசாளினி 49 kg எடை பிரிவில் 80 kg எடையை தூக்கி முதலாம் இடத்தையும், த.வன்சிகா 64 kg எடை பிரிவில் 44 kg தூக்கி...
தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்ட, பூமராங் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மேகா ஆகாஷுக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் சபா...
நடிகை சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அவர் 2010ல் கௌதம் மேனனின் யே மாய சேசாவே படத்தின் மூலமாக அவர் அறிமுகம் ஆன நிலையில் தற்போது 14 வருடங்கள் நிறைவு அடைந்து இருக்கிறது.
தமிழில் அந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற பெயரில் வெளிவந்தது. யே மாய சேசாவே படத்தின் போது தான் சமந்தா நாக சைதன்யா உடன் காதலில் விழுந்து அதன் பின்...
வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த யுவினாவின் தாயும் ஒரு நடிகை தானா.. சந்திரமுகி படத்தில் நடித்துள்ளாரா
Thinappuyal News -
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த படம் வீரம். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகை யுவினா பார்த்தவி. வீரம் படத்தின் மூலம் பிரபலமான யுவினா, தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
இதன்பின் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த யுவினா, சமீபத்தில் வெளிவந்த சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த யுவினாவா இது இப்படி...
அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் சொந்த ஊரான தெற்கு கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தோல்வியடைந்தார்.
இவ்வாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நிக்கி ஹேலியின் சொந்த ஊரான தெற்கு கரோலினாவில் அவருக்கும், அந்நாட்டின் முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையே கடந்த சனிக்கிழமை போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஹேலியைவிட சுமார் 20...
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடிய பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருள், ஆயுதங்கள் மற்றும்...
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகத்தில் நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்து திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்த நிலையில் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து , தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
காசா இனப்படு கொலைக்கு உடந்தையாக இருக்க...
பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று (2024.02.26) காலை 6.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
கனடியப் பிரஜைகள் குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக் கொள்ள நீண்ட காலம் காத்திருப்பதனை விடவும் மாற்று வழிகளை பின்பற்றுவது உசிதமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நோய் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு காத்திருக்கத் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு குடும்ப மருத்துவர்கள்...