ரஷ்ய எதிர்கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது. இதனை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் (Australian Defense Minister Richard Marles)அறிவித்துள்ளார். நவால்னியின் (Alexei Navalny) மரணம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர், நவால்னியின் மனிதஉரிமைகளை மோசமாக மீறியவர்களை பொறுப்புக்கூறச்செய்வதை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளே இந்த...
  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமையை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில் திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  
  யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.
  மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நேற்று முன்தினம்(24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் சுற்றிவளைப்பு கடந்த 7ஆம் திகதி பாடாலைக்கு சென்ற நிலையில் சிறுமி வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம்...
  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கூட்டணி இது குறித்து மேலும் கூறுகையில்,தேசத்திற்காக விரிவான அரசியல் கூட்டணியொன்று உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. பொதுவான இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.பொது நோக்கமொன்றுக்காக எமது பங்களிப்பினை வழங்கத் தயார். கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்கி அதன் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு நடைபெற...
  அனுராதபுரம் கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சமூக வலைத்தள காதல் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில்,...
  திம்புல்கும்புர வீதியில் கடரஹேன பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடகலையில் இருந்து ரிக்கில்லகஸ்கட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனைவி பலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சாரதியும் 6 வயது பிள்ளையும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி...
  காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பிரதேசத்தில் 51 வயதுடைய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சுடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸார் விசாரணை மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லி மீற்றர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும், துப்பாக்கிச்...
  ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் கடற்றொழில் அதிகாரிகள், கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி சோதனை நடவடிக்கை ஒன்றை நேற்று(26.02.2024) மேற்கொண்டதில் ஏறாவூர் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள்...
  தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர், கனிஷ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது இம்மாதம் 23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்றன. குறித்த போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர். முதலாம் இடம் இதன்படி பா.கிசாளினி 49 kg...