வெப்பமான நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில்,
அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் அருந்துதல்
அத்துடன் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் குறித்த அறிவுறுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று முதல் ஓரளவு மாற்றத்தை...
கடற்றொழிலாளர்களின் உயிர்காக்கும் வகையிலான சுகாதார செயற்திட்டமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
வென்னப்புவ, வெல்லமங்கரய கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து இன்று (26.02.2024) குறித்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி கடலுக்கு தொழிலுக்காக செல்லும்போது சுகவீனமடைவது, உயிரழிப்பது போன்றன கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனை
இந்நிலையில், கடற்றொழிலாளர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எவ்வாறு? நோய்வாய்ப்பட்ட சில கடற்றொழிலாளர்களை விரைவாக கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் என்பன இந்த செயற்திட்டத்தில்...
அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் நேற்று (25.02.2024) மீட்கப்பட்டுள்ளன.
குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள கங்கையிலிருந்து நிர்வாணமாக 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார்
பேலியகொட 4ஆம் மைல் கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில் தொடருந்தில் மோதி உயிரிழந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின்...
மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன் தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் மின் கட்டணத்தை 33 வீதத்தால் குறைக்க முடியும் என ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் மின் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க ஆணைக்குழுவிடம் மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
கட்டண குறைப்பு பரிந்துரை
இதேவேளை மின்சார வாரியத்தின் 18 வீதம் மற்றும் உண்மையில் குறைக்கக்கூடிய விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,...
யாழ்ப்பாண நகரின் மத்திய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (26.02.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், வாகனமொன்றில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
எனினும், யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தியதுடன் சம்பவம் தொடர்பில்...
மாத்தறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகத்திற்கு, ஐந்து ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளை அனுப்புமாறு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.
மாத்தறை பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவிருந்தன.
இந்த நன்கொடைகளை வழங்குவதற்காக ஐந்து அதிகாரிகளை அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு இலங்கை விவகார அலுவலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கையளிக்கும் நிகழ்வு
வெளிநாட்டு இலங்கை விவகார அலுவலகத்தைச்...
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க பதவி விலகியுள்ள நிலையில், அரசியல் அழுத்தமே அவரது பதவி விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், கடந்த 2023ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில், பிரசாத் சமரசிங்க, ரூபவாஹினிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அவர் குறித்த பதவிகளிலிருந்து விலகியுள்ளார்.
பதவி விலகலுக்கான காரணம்
அதேவேளை, அவரது பதவி விலகலுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத...
புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதரின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அஞ்சலி செலுத்துதல்
மேலும், மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அதேநேரம், கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின்...
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எமது நாடு விழ முடியுமான இறுதிக்கட்டத்துக்கே விழுந்தது -விஜயதாச ராஜபக்ச.
Thinappuyal News -
தேசிய அடையாளம் மற்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி ஆகிய இரண்டு விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டால், இந்த நாடு சிங்கப்பூரையும் மிஞ்சிய நாடாக இருந்திருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நீதி அமைச்சின் கீழ் இருந்துவரும் தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்க பணியகத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற மாவட்ட சகவாழ்வு சங்கம் அமைக்கும் செயற்பாடுகளின் மூன்றாவது கட்ட நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
நாடாளாவிய ரீதியில் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச். எல். ஈ. எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக மூவர் எஸ்எல்ஈஎஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள்.
வடக்கு மாகாணத்திலேயே பிரதி...