சிறைச்சாலையில் உள்ள தனது கணவருக்காக சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் இருக்கும் வாத்துவ, வேரகம, அல்விஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தூக்கி வந்த ஏழு மாத ஆண்குழந்தை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் கட்டுப்பாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள்
குறித்த பெண் தனது கணவரைப் பார்வையிடுவதற்காக களுத்துறை சிறைச்சாலைக்கு வருகை...
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிவஞானம் சிறீதரன் எம்.பி. வெற்றி பெற மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சில நாட்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றார்.
புதிய தலைவருக்கான போட்டி
கூட்டம் முடிந்ததும் அவரது அறையை நோக்கி அவர் விரைந்தார். அப்போது ஜனாதிபதியின் அறைக்கு...
நுரைச்சோலை பிரதேசத்தில் நண்பர்களுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், நுரைச்சோலை, ஆலங்குடா பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் ஆட்கள் சிலர் மறைந்து கொண்டு போதைப் பொருளை பயன்படுத்தியதைக் கண்ட பிரதேசவாசிகள் அது குறித்து அப்பகுதி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் தன்னை ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
அதனையடுத்து,...
பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில், மாணவனின் பெற்றோர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மன்னார் வங்காலை கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவர் குறித்த பாடசாலையில் உள்ள வகுப்பறை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
ஆசிரியர்களின் மோசமான செயல்
இந்நிலையில்,...
வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு இணைய ஊடகவியலாளரை பொலிஸார் தடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று (23.02.2024) இடம்பெற்ற விபத்தின் பின்னரே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
மருதங்கேணி பொலிஸார்
குறித்த...
கஹதுடுவ பிரதேசத்தில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து கஹதுடுவை- ரிலாவல பிரதேசத்தில் நேற்று(24.02.2024) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மோட்டார் சைக்கிளொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை தற்போதைக்கு வெளியிட முடியாது என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதையும் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சனத் நிஷாந்தவின் மனைவி மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை
இதற்கமைய,...
வெப்பமான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த வெப்பமான காலநிலையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மிகவும் வெப்பமான காலநிலை கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமானது. தற்போது 8 மாவட்டங்கள் வெப்ப அபாயப் பிரதேசங்களாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பமான காலநிலை
கொழும்பு, கம்பஹா, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை...
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு மருமகன் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23.02.2024) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழசைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதன்போது உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும்...
பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர் தனது காதலியுடன் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர் தனது காதலியுடன் தங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பணத்தை திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்பாறை பேருந்து நிலையத்தில் யுவதியை நிறுத்திவிட்டு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்து குறித்த இளைஞன் பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
அம்பாறை பொலிஸ்...