ஸ்பெயினின் வலென்சியா நகரில் 138 வீடுகள் உள்ள தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு பெருமளவு மக்கள் தங்கள் வீடுகளிற்குள் சிக்குண்டிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14 அடுக்குகளை கொண்ட தொடர்மாடிக்கட்டிடமொன்றில் பரவிய தீ அருகில் உள்ள கட்டிடங்களிற்கும் பரவியுள்ளது. இந்நிலையில் பலர் தங்கள் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர். மளமளவென பரவிய தீ இந்நிலையில் வீடுகளின் பல்கனிகளில் உள்ள மக்களை தீயணைப்பு படையினர் மீட்டுவருகின்றனர் அதேவேளை இதுவரை...
  கனடாவில் வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியல் அதிகளவான கனடியர்கள் விலைக் கழிவு அடிப்படையிலான கொள்வனவுகளில் நாட்டம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லெஜர் நிறுவனததினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போதைக்கு பொருட்களின் விலைகள் குறைவடையக் கூடும் என மக்கள் கருதவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.பணவீக்கத்தினால் பொருட்களின் விலைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 64...
  2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா உட்பட வனத்தினை அண்மித்த பகுதிகளிலில் அனுமதியற்ற சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியும், வெங்காய வெடி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியும் (சட்டவிரோத துப்பாக்கி) தொடருந்து விபத்துக்களாலும் இவை பலியாகியுள்ளன. 3 யானைகள் பலி மேலும் 05 வயது தொடக்கம் 40 வயதுடைய யானைகளே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இவ்வருடம் இதுவரை 03...
  ஊழல்களை விமர்சித்த காரணத்தினாலேயே தான் மின்சக்தி அமைச்சுப் பதவியில் இருந்த விலக்கப்பட்டதாக சம்பிக ரணவக்க எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2010 ஆம் ஆண்டு ஆரம்பமான ராஜபக்ச ஆட்சியின் இரண்டாம் தவணையின் பின்னர் நாட்டின் வருமானம் ஈட்டும் வழிகள் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சி அதற்குப் பதிலாக ஊழல் மற்றும் மோசடிகள் அதிகரித்தது. அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில் ,...
  கைதியொருவருக்கு போதை மருந்து வீசியெறிந்தவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுகேகொட, கங்கொடவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று (22) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கங்கொடவில, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து வழக்குகளுக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள் நீதிமன்ற தடுப்புக் கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடித உறை இதன் போது நீதிமன்றத்தில் உட்புறமாக அமர்ந்திருந்த நபரொருவர் தடுப்புக் கூண்டுக்குள் போதைப்பொருளை உறையொன்றுக்குள் சுற்றி வீசியெறிந்துள்ளார். சந்தேகநபரின் செயலை நீதிபதியின் ஆசனத்தில் இருந்த மேலதிக நீதவான்...
  கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளம் உதவி விரிவுரையாளரின் மூளை செயலிழந்ததால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய 27 வயதுடைய லக்மினி போகமுவ, அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார். பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில் வீதியைக் கடக்கும்போது லொறியொன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேலைக்கு செல்வதற்காக...
  தலைமன்னார் இறங்குதுறை பகுதியில் மணல் அகழ்வு பணி மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.02.2024) இடம்பெற்றுள்ளது. தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஒப்பந்த நிறுவனம் இந்த சந்தர்ப்பத்தில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததோடு எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக...
  அச்செழு பகுதியில் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.02.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். மேலதிக விசாரணை காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர். இந்நிலையில், இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி...
  40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்
  நீர்வேலியில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று (21.02.2024) அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். அம்பலமான உண்மைகள் மாணவன் உயிரிழந்த விவகாரம்...