நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்றையதினம்(22.02.2024) தெல்லிப்பழை பகுதியில் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது. பொலிஸ் தகவல் எனவே குறித்த முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இரங்கல் தீர்மானம் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார். அரசியல்வாதிக்கு இது மிகவும்...
  ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ல மலைத்தொடர் நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளமொன்றில் தவறி விழுந்த இளைஞர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
  மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று (22.02.2024) கையளித்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதிகரிக்கப்பட்ட அதே சதவீதத்தில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக...
  உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வக்சின் டேரா நெற்வேக் (Global Vaccine Data Network) இன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஃபைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ராசெனெகா போன்ற நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் இதயம், மூளை போன்றவற்றில் அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரி எட்டு நாடுகளில் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 99 மில்லியன் மக்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. இது...
  தேசபந்து தென்னகோனுக்கு இன்னொரு பதவி நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. மூன்று மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. பதவிக்காலம் இந்நிலையில் எதிர்வரும் 26ம் திகதியுடன் அவரது மூன்று மாத பதவிக்காலம் நிறைவடைகின்றது. ஆனால் அவருக்கான பதவி நீடிப்பு...
  வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் நேற்று புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும்...
  ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டி ஒன்றை, வன்முறை கும்பல் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய வன்முறை கும்பல் வன்முறை கும்பல் முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட வேளை , சாரதி அவல குரல் எழுப்பவே அயலவர்கள் கூடியதால், தாக்குதலை நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் முன் பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும்...
  சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளை - ரங்கிரிய மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rahmanullah...
  தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்ட காவல்துறையினரின் வீதிச் சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் விசாரணை இதன்போது 7 எருமை மாடுகளை ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட கப்ரக வாகனமும் அதன் வாகன சாரதி மற்றும் வாகன உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கால்நடை கொண்டு...