பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பல மயில் தூரம் நடத்து சென்று தங்கள் உறவினர்களை சந்திப்பது, வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். காரணம் அப்போது போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது தொலைதூர நாடுகளுக்கு கூட சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். ஆனால் ஒரு நாட்டை நடந்து சென்று சுற்றிப்பார்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அது மிகவும் அழகான நாடு, ஆல்ப்ஸ் மலையின் அழகு, பச்சை போர்வை...
  ஜெர்மனியின் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். ஜெர்மனியில் உள்ள, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக, ஜெர்மனி...
  கனடாவில் பணவீக்கம் வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கனடாவில் பணவீக்க வீதம் 2.9 வீதமாக பதிவாகியுள்ளது. பெற்றோலின் விலை வீழ்ச்சி பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவில் முக்கிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பணவீக்க வீதம் 3.3 வீதமாக காணப்படும் என நிபுணர்கள் எதிர்வுகூறியிருந்த நிலையில் பணவீக்க வீதம் 2.9 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வருடாந்த அடிப்படையில் பெற்றோலின் விலை 4 வீதத்தினால்...
  விஞ்ஞானி ஃப்ரீக் வோங்க் என்வர் 26 அடி நீளமுள்ள பச்சை அனகோண்டா பாம்பின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அமேசான் காடுகளில் இருந்து இந்த புதிய வகை பச்சை அனகோண்டாவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்பு என்று நம்பப்படும் அனகோண்டாவின் வீடியோவை வோங்க் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த பாம்பு கார் டயரைப் போல் தடிமனாகவும், எட்டு மீட்டர் நீளமும், 200 கிலோவுக்கு மேல் எடையும் கொண்டதாகக் கூறப்படுகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட...
  2024-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார். சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள் வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக்...
  எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த கருத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். செலுத்தப்படாத மின் கட்டணங்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை ஒப்புக்கொண்டுள்ளார். தேக்கநிலையில் கட்டணங்கள் எனினும், அண்மைய கட்டண அதிகரிப்புக்கு, ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக கட்டணங்கள் தேக்கநிலையில்...
  வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நேற்று (21.02.2024) அதிகாலை வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையிலாக பொலிஸ் குழுவினர்...
  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது நேற்று (21.02.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது. தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள வீதில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் வழங்கி தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சடலத்தை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச்...
  மெகசின் சிறைச்சாலைக்குள் இருந்து பெண்ணொருவர் மேற்கொண்டு வரும் போதைப் பொருள் வர்த்தகத்தின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெகசின் சிறைச்சாலையை அண்டிய சர்பண்டைன் மாவத்தையில் சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசியத் தகவல் சிறைச்சாலையில் இருக்கும் பெண் வழங்கும் தகவலுக்கு ஏற்ப போதைப்பொருளை பெற்றுக் கொள்வது, அதனை அவிசாவளை,கடுவலை பிரதேசங்களில் விநியோகம் செய்தல் போன்ற செயற்பாடுகளை சந்தேக நபர் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்...
  அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 60 வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் 12 கண்சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு, பார்வைக் குறைபாடுள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கும் வகையில் கண் மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்து செயற்படுத்தியதன் மூலம் இது தெரியவந்துள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் அவ்வாறான கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்ட போதும்,...