பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க கடுவெல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று(21.02.2024)குறித்த தீர்ப்பை இரத்துச் செய்துள்ளது. பணச்சலவை சட்டம் கடந்த டிசம்பரில் கடுவெலயில் வசிக்கும் வெலிவிட்ட சுத்தா எனப்படும் மலலகே சுதத் கித்சிரி என்பவருக்கு சொந்தமானது எனும் சந்தேகத்தில், அவரது சகோதரிகளில் ஒருவரான எச்.எம். ஹீன்மெனிகே என்பவருக்குச் சொந்தமான ஐந்து சொகுசு பேருந்துகள், நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை...
  மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தி கொடுக்கவில்லை. மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். என சுற்றாடல் துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், பொருளாதார நெருக்கடி நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு...
  கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முறைமையில் மாற்றம்...
  அதிரடிப்படை பாதுகாப்பை சீ.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் உயிரச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், தனக்கான பாதுகாப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். மனு மீதான விசாரணை இந்நிலையில் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு நேற்று(21.02.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்...
  12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் நங்கூரம் ஒன்று காலி பழைய துறைமுகத்தின் இறங்குதுறைக்கு அருகில்கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பழைய நங்கூரங்கள், ஒன்றாகக் கட்டப்பட்டு நங்கூரமாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கிகள் போன்றவை இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று துளைகள் கொண்ட நங்கூரம் குறித்த கல் நங்கூரம் கடந்த 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு சொந்தமானது என்பது சமீபத்திய நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை மூன்று...
  ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒக்டோபர் மாதமளவில்...
  சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மதுபானங்களின் விலை அவர் மேலும் கூறுகையில்,பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக நிம்மதியாக இல்லை.மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை புத்தாண்டை கொண்டாடவுமில்லை. மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான...
  அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. எப்படித் தேர்தலை நிறுத்தலாம் என்று ரணில் அரசு யோசிக்கின்றது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும், "எந்தத் தேர்தல் முதலில் நடக்கும்? ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா?" என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, "எந்தத் தேர்தலையும்...
  காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (20.02.2024) இரவு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது காரைநகர் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை வன்முறை கும்பல் தீயிட்டு எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.