இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 4 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள். இவ்வாறான நிலையில், வடக்கு காசாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்கள் உணவை வாங்குவதற்காக வரிசையில் காத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கி சூடு...
  உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், `ரஷியாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு...
  ஆசியாவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி சிங்கப்பூரில் (20.02.2024) ஆம் திகதி தொடங்கியது. உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன. முதல் நாள் (20.02.2024) சீனாவைச் சேர்ந்த கோமாக் மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனங்களின் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் ரஷிய நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில் நடப்பாண்டுக்...
  கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் நிதிநெருக்கடி நிலையையும் தனிமையையும் உணர்வுதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களுடன் ஒப்பீடு செய்யும் போது வாடகைக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரம் குறைவானதாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகைக் குடியிருப்பாளர்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை...
  கனடாவில் வீட்டில் யாருமில்லை என்ற அடிப்படையில் விதிக்கப்பட்ட வரியினால் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த தம்பதியினருக்கு எதிர்பாராத விதமாக இவ்வாறு வரி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வீடுகளை காலியாக வைத்திருப்பவர்களுக்கு மாகாணத்தில் ஓர் வரி அறவீட்டு முறை காணப்படுகின்றது. வேகன்சி வரி என இந்த வரிக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை பயன்படுத்தாது வைத்திருப்பவர்களிடமிருந்து இந்த வரி அறவீடு செய்யப்படுகின்றது. எனினும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுகளைச் சேர்ந்த மெடிசன் மற்றும்...
  அமெரிக்காவில் மனைவி விவாகரத்து கேட்டதால், தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப வழங்குமாறு கோரி கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பட்டிஸ்டா என்ற மருத்துவர் கடந்த 1990ம் ஆண்டு மருத்துவரான டோமினிக் பார்பரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2000வது ஆண்டு, பார்பராவிற்கு சிறுநீரகங்கள் செயல் இழந்தது....
  கனடாவில் இளம் சாரதியொருவர் வாகனத்தை செலுத்திக் கொண்டே தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வாகனத்தைச் செலுத்திக் கொண்டு சக பயணியுடன் தகாத செயலில் ஈடுபட்டதாக குறித்த சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.ஒன்றாரியோ மாகாணத்தின் பிட்டர்போ பகுதியின் வீதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைகளின் போது சாரதியும் சக பயணியும் தகாத செயலில் ஈடுபட்டதனால் இவ்வாறு...
  மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல், யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (20.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, மனித உரிமைச் சட்டங்கள் தொடர்பாகவும், பாதுகாப்பு தரப்பினர் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாகவும், சிறு குற்றம், பாரிய குற்றங்கள் இடம்பெறும்போது விசாரணைகள் மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு...
  தமிழர்களுக்கு எதிரான ஒரு தலைவரை கொண்டுவர வேண்டுமென்ற பிரச்சாரத்துடன் கடந்த 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி ஆதரவு வழங்கிய விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கான ஐந்துநாள் விஜயத்தின் பின்னர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அவர் மேலும் தெரிவித்ததாவது, “எமது நாட்டின் வரலாற்றில் அனைத்து அரசியலும் அடுத்தவர்களுக்கு எதிராக இருந்தது....
  சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (15) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு...