மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (20.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கற்பிணித் தாயொருவர் நேற்று மாலை மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார். மேலதிக விசாரணைகள் இந்நிலையில் அந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு...
  போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார். இரத்மலானைப் பிரதேசத்தில் காலி வீதியில் அமைந்துள்ள பிரபல மருந்தகம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். யுக்திய நடவடிக்கை குறித்த மருந்தகத்தில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யுக்திய நடவடிக்கை காரணமாக நாட்டில் தற்போதைக்கு போதைப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த...
  நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20.02.2024) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் வரை வசிக்கின்றனர். ஆளுநரின் பணிப்புரை மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை...
  ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச காணி உரிமை கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்று (20) ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். 1955 ஆம் ஆண்டில் 2 ஆவது மாநாட்டை இலங்கை நடத்தியதுடன், 69 ஆண்டுகளுக்கு பிறகு...
  ஊறணி பகுதியில் கடந்த காலத்தில் சிறுமி ஒருவரை கடத்தி கப்பம் கேட்டு கப்பம் கொடுக்காத நிலையில் சிறுமியை கொலை செய்து கிணற்றில் போட்டவர்கள் என மக்களால் குற்றம் சாட்டப்பட்ட பிள்ளையான் குழுவினர் மன்னாரில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு போராடுவது வேடிக்கையானது என சிவில் சமூக செயற்பாட்டாளரும் வடகிழக்கு முன்னேற்ற கழக தலைவருமான கு.வி. லவக்குமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கிரானில் உள்ள அவரது வீட்டில் நேற்று (20) இடம்பெற்ற...
  அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். எட்கா உடன்படிக்கை குறித்த கடிதத்தில், இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தல், இலங்கையின் விமான நிலையங்களின் முகாமைத்துவத்தை இந்திய நிறுவனங்களிடம் கையளித்தல், எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல், போன்ற விடயங்களில் அரசாங்கம் இதுவரை...
  பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலே நேற்று(20.02.2024) பசறை உள்ளூராட்சி மன்ற விளையாட்டு மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி அதன் போது மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கானதாகவும், கடுமையான கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் கூறியுள்ளனர். இந்த மாணவர்களில் 18 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எஞ்சிய மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும்...
  பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டம் தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால் (NRPM) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு குறித்த கூட்டுப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக NRPM அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,“மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், ரயில்வே, வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற...
  அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 லட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கும் பணி பெப்ரவரி 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த முறை தெரிவு செய்யப்படாத நிலையில், மேன்முறையீட்டு செய்யாதவர்கள் மற்றும் முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறாதவர்களுக்கும் மீண்டும் தகவல் உறுதி செய்ய அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இதேவேளை, ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான...
  சுனில் ஹந்துன்நெத்தி வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த செய்திகளை மறுத்துள்ள ஹந்துன்நெத்தி, இது எதிர்கட்சியின் அரசியல் குழுக்களால் மேற்கொள்ளப்படும் பொய்யான பிரசாரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தான் எவ்வித வாகன விபத்திலும் சிக்கவில்லை என்றும், நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.