கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பெயர் பட்டியல்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர்.
இவர்களது பெயர் பட்டியல் கூட சமர்ப்பிக்கப்படாத நிலையில், மாணவர்களின் கல்விக்கு நடவடிக்கைகளுக்கு தேவையான கடன் வசதிகள் வழங்காமையை ஏற்க முடியாது.
KIU போன்ற தனியார் பல்கலைக்கழக...
கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
பத்தரமுல்லை 10 பத்தமக விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இன்று (21) மாலை 5 மணிக்கு சமயச் சடங்குகளுடன் நடைபெற்று தலவத்துகொட பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் உதவி விரிவுரையாளரான 24 வயதுடைய லக்மினி போகமுவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் விக்கிரமசிங்கபுரவிலிருந்து வேலைக்குச்...
thinappuyalnews-18.02.2024
கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொடுப்பனவை அதிகரிக்க யோசனை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது.
எனினும் அதற்கு மாணவர்கள்...
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து தேசத்துரோகம்
Thinappuyal News -
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிவித்துரு ஹெல உறும தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசத்துரோகம்
அமைச்சரின் இக்கருத்து, அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் படி எடுக்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறுவதாகும். இதன்படி...
சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
தவறான செயல்முறை, உள்நோக்கம் மற்றும் பேச்சு சுதந்திரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகிய 3 அம்சங்களில் கவனம் செலுத்தி, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அவர் தீவிர கவலைகளை வெளிப்படுத்தியதாக வெளிநாட்டு...
இலங்கையில் பிறப்புவீதம் குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால் 2018 இல் அந்த எண்ணிக்கை 328,000 ஆகக்...
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
கடந்த வாரம் பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்சிபி விக்ரமசிங்கவை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேசினர்.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ். மாவட்ட மேலதிக...
சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
இதன் முதற்கட்டமாக கண்டி நகரில் இன்று (20) பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
“ஆசிரியர், அதிபர் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்த வேலைத்திட்டமும் இல்லை.அவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். ஆசிரியர் பதவியில் இருந்து அதிபர் வரை செல்லும்...
தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் ஏற்பட்ட தகராற்றில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (19) இரவு இராமநாதபுரம், கல்மடு நகரில் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில், இவர்கள் பளை மற்றும் வவுனியா...