நடிகர் விஜய் தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் தனது தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களை முடித்தபின் முழுமையாக அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அரசியலில் களமிறங்குவதால் 69வது திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என விஜய் கூறியுள்ளது, ரசிகர்கள் பலரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. விஜய் குடும்ப...
  சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது. சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் ரஃபா நகரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே யுத்தம் காரணமாக பலர் வீடுகளை இழந்த நிலையில் அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனினும் இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு...
  கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் ரஃபாவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. காசாவின் தெற்கு பகுதிக்குள் தங்களது படைகள் எந்த சந்தர்ப்பத்திலும் நுழையக்கூடுமென எச்சரித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதேசமயம் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் காசாவின் முக்கிய...
  ஆப்கானிஸ்தானின் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் பெய்த கனமழையால் நிலசரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்ததில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், கட்டிட இடிபாடுகளில் சுமார் 25 பேர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் மாகாணத்தில் உள்ள நூர்கிராம் மாவட்ட மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள...
  இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள வீடொன்றில் 03 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 08 மாதங்கள் மற்றும் 04 வயது, 06 வயதுடைய மூன்று குழந்தைகளே கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.  
  இத்தாலியில் அரசாங்கம் வழங்கும் மகப்பேறு நிதியுதவியை மோசடியாக பெற்று வாழ்க்கையில் ஜாலியான வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்த பெண்ணொருவர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இத்தாலியில் உள்ள ரோம் நகரைச் சேர்ந்த 50 வயதான பார்பரா ஐயோல் என்ற பெண், வேலை செய்த நிறுவனங்களையும், அரசையும் சுமார் 24 ஆண்டுகளாக ஏமாற்றி மகப்பேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம் தரித்ததாகவும், இதில் 5 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும்,...
  ஒன்றாரியோவில் உற்பத்தி செய்யப்பட்ட 800 ட்ரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்கொடையாக இந்த ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஸ்ய படையினருக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக இந்த ட்ரோன்களன் வழங்கப்பட உள்ளன. சுமார் 95 மில்லியன் டொலர் பெறுமதியான ட்ரோன்கள் இவ்வாறு உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் பில் பிலயர் தெரிவித்துள்ளார். 3.5 கிலோ கிராம் எடையுடை இந்த ட்ரோன்கள் புலனாய்வுத் தகவல் திரட்டல் மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக...
  இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி அவர் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கனடிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மெலோனி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடாவிற்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம்...
  கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். சஸ்கட்ச்வானின் டேவிட்சன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 80 வயதான ஆண் ஒருவரும், 81 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீயணைப்புப் படையினர் வீட்டிற்குள் பிரவேசித்த போது இரண்டு வயோதிபர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர்...
  பிடிபன கடற்றொழில் துறைமுகம் அதிகாரச் சபையிடம் ஒப்படைக்கப்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் அந்த பகுதியின் கடற்றொழிலாளர்கள் அதிகபட்ச பயன் பெறுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிப்படைத் தன்மை கர்தினாலுக்கு எந்த நேரத்திலும் சொத்தை தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் எண்ணம் இருந்ததில்லை" என்று கர்தினாலின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பேராயரின் சபைக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர்...