பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஏராளமான மக்கள் அவரது மரணம் தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். பெண் விரிவுரையாளர் மரணம் இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி...
  மகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கி சூடு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை...
  சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நடனம், சங்கீதம், நாடகம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இந்த பிரயோகப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு சென்று அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு...
  கஹவத்தை கொடக்கதென்ன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண நேற்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றைய தினம் இரத்தினபுரி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொட்டகெதன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கு சர்வதேச சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சதித்திட்டம் தொடர்பில் இலங்கை புலனாய்வு பிரிவு தகவல்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் டுபாயிலிருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட பியூமா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புலனாய்வு அறிக்கையின்...
  எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய, நேற்று (19) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், ​​குறித்த பெண் வீட்டினுள் உடல் சிதைந்த நிலையில் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸார் விசாரணை அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும்...
  கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக இரு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கோர விபத்து ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த 41...
  அமெரிக்கா ரெஸ்டாரன்ட் ஒன்றில் உயிரிழந்த தனது நண்பர் நினைவாக டிப்ஸாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கி நபரொருவர் ரெஸ்டாரன்ட் ஊழியர்களை திக்குமுக்காடவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் மார்க் என்பவர் இரவு சாப்பாடு சாப்பிட சென்று உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்துள்ளார். சாப்பிட்டு முடித்த உடன் பெரும்தொகையை டிப்ஸ் ஆக வழங்க முடிவு செய்த அவர் சாப்பிட்டு முடித்தபின், ஊழியர்...
  பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி இனத்தவரிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரேலிய பிரதமர் கவலை இந்த சண்டை அந்த தீவின் எங்கா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்" என...
  போதைப்பாவனைக்கு அடிமையான இரு இளைஞர்கள் நேற்றைய தினம் (17.02.2024) உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ் - மல்லாகம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதுத் தொடர்பில் மேலும் தெரியவருவது, போதைப் பொருள் பவணைக்கு அடிமையான குறித்த இளைஞனுக்கு போதைப் பொருள் வாங்குவதற்கு தாயார் பணம் கொடுக்காததால் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவணை குற்றச்சாட்டில் கைது...