வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சத்திர சிகிச்சை உபகரண பட்டியலின் முன்னுரிமை அடிப்படையில் சுமார் 3800 உபகரணங்கள் தட்டுப்பாடாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, மொத்தமாக 5800 உபகரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வைத்தியசாலை கட்டமைப்பில் நெருக்கடி இந்த நிலைமைக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குள்...
  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில், வைத்தியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எழுத்துமூலமாக வழங்கப்பட்ட உறுதிமொழி இதனைத்தொடர்ந்து சுகாதார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூலமாக...
  செட்டிகுளம் பகுதியில் 650 ஏக்கர் வயல் காணியினை 650 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதியளித்துள்ளார். வவுனியாவில் இன்று (18.02.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பல நூறு ஏக்கர் காணிகள் விடுவித்துக் கொடுக்கப்பட்டிருந்தும் அதனை 15 பேர் மாத்திரமே செய்து வருகின்றனர். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இந்த வயல் காணிகளை...
  தம்பனைச்சோலை பகுதியில் 80,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரை இன்று(18.02.2024) வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசேட சோதனை இந்நிலையில் அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 80,000 மில்லிகிராம் ஐஸ்...
  76 ஆண்டுகால சாபம் நீங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும், எட்டு மாத காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் யுகம் உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் ஆதரவு இந்த அதிகார மாற்றத்திற்கு அஞ்சும் தரப்புக்கள் தற்பொழுது பல்வேறு சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கான மக்கள் ஆதரவு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும்...
  வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இந்த இளைஞன், மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் கொட்டாவ - பாடசாலை மாவத்தையில் உள்ள வீடொன்றில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். மின்சாரம் தாக்கி இந்த இளைஞன் வீட்டின் மின் விசிறியில் இயங்காமல் இருந்த மின்விசிறியை சீர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக...
  போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட சீசீரிவி கமராக்கள் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 300 பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
  பிலியந்தலை இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிலியந்தல சித்தும் அல்லது சென்டா என்ற நபரின் கும்பலுடன் தொடர்புடைய 2 யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது, ​​போதைப்பொருள் உட்கொள்ள வந்த மற்றும் போதைப்பொருள் உட்கொண்ட இரு இளைஞர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் சந்தேகநபர்களுடன், 250 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 15 போதை...
  மாலைத்தீவுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த இலங்கையரொருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், அவர் நாடு கடத்தப்பட்டதன் பின்னர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் தம்மிடம் பெறுமதியான இரத்தினக் கற்கள் இருப்பதாகக் கூறி அவற்றை முதலீட்டுக்குக் கொடுத்து மாணிக்கக்கல் வியாபாரிகளிடம் இருந்து இருநூறு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தினை மோசடி செய்து மாலைத்தீவிற்கு தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பு...
  இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருட்டுச் சம்பவங்கள் நள்ளிரவு நேரங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து இந்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதறகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.