புலம்பெயர்வோர், புகலிடக்கோரிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் நாடாக இருந்த கனடாவின் போக்கு முற்றிலுமாக மாறி வருகிறது. தினமும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது கனடா. சர்வதேச மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கனடாவுக்கு திடீரென பிரெஞ்சு மொழி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியர்களுக்கெதிரான கனடாவின் நடவடிக்கைகளால் கனடா மீதான மோகம் இந்தியர்களுக்குக் குறையத் துவங்கியுள்ளது. சமீபத்தில், கனடாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் இந்தியர்கள் குறித்த ஒரு செய்தி...
  கனடாவில் சுமார் 25 வீதமானவர்கள் மருந்து வகைகள் உட்கொள்வதனை தவிர்த்து வருகின்றனர். மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இவ்வாறு மக்கள் மாத்திரைகளை தவிர்த்து வருகின்றனர். Heart and Stroke and the Canadian Cancer Society என்னும் அமைப்பினால் இந்த நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைக்கு அமைய தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டிய மருந்து வகைகள் தவிர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிலர் முழுவதுமாக தவிர்ப்பதாகவும்...
  கனடாவில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று காணொளியாக பதிவாகியுள்ளது. ரொறன்ரோவின் யோக் பிராந்தியத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. காதலர் தினமன்று முகமூடி அணிந்த கும்பலொன்று வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. கையில் ஆயுதங்களுடன் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்த பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகவும், வீட்டிலிருந்தவர்களை பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில், வீட்டில் இருந்த...
  தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கான 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். அவசர இலக்கம் ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவசர இலக்கம் ஊடாக தமிழ்மொழியில் தொலைபேசி மூலமாக முறைப்பாடுகள் மேற்கொள்வதற்கான செயற்திட்டம் நாளைய தினத்தில் இருந்து நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் உத்தியோகத்தர்கள் இதற்காக பயிற்சி...
  தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஏழு வருடங்களாக தாம் குடியுரிமையை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு இந்தநிலையில் தம்மை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்பட்டுள்ளதாகவும் எனவே தம்மால் அரசியல்...
  பரந்தன் ஏ 35 வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது இன்று (16-02-2024) காலை இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஏ 35 வீதியின் புளியம் பொக்கணை பகுதியில் இருந்து கன்னிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதியுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 02 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன்...
  வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்த பெண்ணொருவரின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இன்று(16.02.2024) பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்று (15) மாலையும் நகரசபைக்கு வருகை...
  மீகொட பிரதேசத்தில் 12 வயது சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது 61 வயதான கொத்தனார் உட்பட மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறுமி மூன்று பேரால் பல சந்தர்ப்பங்களில் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்துள்ளது. குறித்த வழக்கு இன்று(16.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஐஸ்கிறீமை விற்பனை செய்தவர் சுன்னாகம் பகுதியில் இயங்கும் ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே , ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5 ஆயிரம்...
  வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16.02.2024) இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கை குற்றவாளிகள் ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கை குற்றவாளிகள் பொலிஸ் விசாரணை இதன்போது வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது | 2...