நிரந்தர தொடருந்து கடவை மற்றும் சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை தொடருந்து கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வொன்றை முன்மொழிந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட தொடருந்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறு குழந்தை உள்ளிட்ட இருவர் பலியாகி இருந்தனர்.
களவிஜயம்
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் (16.02.2024) களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் நிலைமைகளை ஆராய்ந்த...
சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக சேவையில்லாமலிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு பிராந்தியத்தில் மாத்திரம் இவ்வாறான 103 சேவையில் ஈடுபடாத பேருந்துகள் உள்ளதாகவும், அந்த பேருந்துகளின் பதிவை இரத்து செய்யுமாறு அவற்றின் இலக்கங்களுடன் கூடிய அறிக்கை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கழிவறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.
கழிவறைகளை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்..
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கமவிடம் மேற்கொண்ட விசாரணையில்,
கழிவறை கட்டணம்
கழிவறை கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அதன்படி, கழிவறைகளை பராமரிக்கும் தரப்பினருக்கு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முந்தைய...
களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாரியபொலவில் இருந்து களுகமுவ நோக்கி நேற்று மாலை பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது வானில் 12 பெண்கள் உட்பட 15 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களின் விபரம்
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் விபத்து...
உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்றொழிலாளர் பிரச்சினை
இதன்போது கருத்து...
தமிழ்தேசிய முன்னிக்கு என்ன கொள்கை இருக்கிறது தமிழ் மக்கள் தொடர்பில்-அமைச்சர் டக்ளஸ்
Thinappuyal News -
மலையக மக்களின் வாக்கு உரிமை பறிப்புக்கு ஆதாரவாக வாக்களித்த ஜீ ஜீ பொன்னம்பலதின் வழித்தோன்றலில் வந்த தமிழ்தேசிய முன்னிக்கு என்ன கொள்கை இருக்கிறது தமிழ் மக்கள் தொடர்பில்-மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு நேர்காணல்
அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர் மாத்திரமே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் 340 விசேட வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்பட்டதாகவும் தற்போது சுமார் 400 விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்காக நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்னந்தோப்பு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் குச்சவெளியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தலைமன்னாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்,...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன வெளியிட்டுள்ளார்.
சபையின் தலைவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தடுக்கும் வகையில் நடவடிக்கை
ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம்...
ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின் போது இந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.
05 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஹகல, ஹுங்கம, எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரசிக சம்பத் என்ற 30 வயதுடைய சந்தேக நபரும் 25 வயதுடைய அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.
இருவர் கைது
போதைப்பொருள்
வாட்ஸ்அப்...